திருப்பூர். பிப். 26-
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர், வலசுபாளையம் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரக்கோரி அப்பகுதி மக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் உள்ள இடங்களுக்கு மாநகராட்சி அனுமதி வழங்கி 15 ஆண்டுகளாகிறது. ஆனால், இதுவரையிலும் தண்ணீர் தொட்டி அமைக்கபடவில்லை. சுமார் 70 குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் ஒரே ஒரு குடிநீர் குழாய் மட்டுமே உள்ளது. அதிலும் ஒரு குடும்பத்திற்கு 4 குடம் தண்ணீர் மட்டுமே கிடைக்கின்றது. ஆகவே, எங்கள் பகுதியில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி அமைத்திட வேண்டும். மேலும், இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைத்தும், சுகாதாரத்தையும் மேம்படுத்திட வேண்டும் என கூறியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.