மும்பை,பிப்.25-
பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை கிளையில் நடந்த ரூ.11,400 கோடி மோசடி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது மனைவி அமி, சகோதரர் நிஷால், மாமா மெகுல் சோக்ஷி ஆகியோர் வெளிநாடு தப்பி சென்றுவிட்டனர். இது தொடர்பாக சி.பி.ஐ. கடந்த மாதம் 31-ந்தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதேபோல அமலாக்கத் துறையினரும் விசாரணை செய்து நாடு முழுவதும் சோதனை நடத்தினர். நீரவ் மோடியின் சொத்துக்கள், சொகுசு கார்கள், பொருட்கள், உள்பட அனைத்தும் முடக்கப்பட்டன. பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை கிளையின் அதிகாரிகள் உடந்தையால் இந்த மோசடி நடந்ததாக 6 வங்கி ஊழி யர்கள் உள்பட 14 பேரை சி.பி.ஐ. கைது செய்தது. பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மு ம்பை பிராடி ஹவுசின் கிளையின் பொது மேலாளர் ராஜேஷ் ஜிண்டல், ஓய்வு பெற்ற துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி மற்றும் தலைமை மேலாளர் பெச்சுதிவாரி,மேலாளர் யஷ்வந்த் ஜோஷி, ஊழியர் மனோஜ் கரத், ஏற்றுமதி அதிகாரி புரபுல் சாவத் ஆகியோர் கைதாகி இருந்தனர்.

இந்த நிலையில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சுனில்மேத்தா, செயல் இயக்குனர் கே.வி. பிராம்ஜ்ராவ் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இருவரும் மும்பை வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.