திருச்சூர், பிப்.25-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளராக கொடியேரி பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருடன் தேர்வு செய்யப்பட்ட 87 பேர் கொண்ட மாநிலக்குழுவில் 10 பேர் புதுமுகங்கள் ஆவர். கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த 22ஆம் தேதி துவங்கிய சிபிஎம் மாநில மாநாடு பிப்ரவரி 25 ஞாயிறன்று 2 லட்சம் செம்படை வீரர்களின் அணிவகுப்புடனும் பொதுக்கூட்டத்துடனும் நிறைவு பெற்றது. பிரதிநிதிகள் மாநாட்டின் நிறைவாக மாநிலக்குழு தேர்வு நடைபெற்றது. மாநிலச் செயலாளராக கொடியேரி பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். 87 பேர் கொண்ட மாநிலக்குழுவும் அகில இந்திய மாநாட்டுப் பிரதிநிதிகளாக 175 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். டி.கிருஷ்ணன் தலைமையில் 5 பேர் கொண்ட கட்டுப்பாட்டு குழுவும் தேர்வு செய்யப்பட்டது. மாநிலக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் முதல்வரும் முதுபெரும் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன், பாலோளி முகம்மதுகுட்டி, பி.கே.குருதாசன், கே.என்.ரவீந்திரநாத், எம்.எம்.லாரன்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.