தஞ்சாவூர்,பிப்.24-
தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு தனி ரயில் விட வேண்டும். அதுவரை மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலை தஞ்சை – கும்பகோணம் வழியாக இயக்கக் கோரி அனைத்துக் கட்சிகள் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில் தஞ்சாவூரில் ரயில் சிறைப்பிடிப்பு போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாநகரச் செயலாளர் குருசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் சரவணன், முன்னாள் எம்.பி., சிங்கார வடிவேலு, திமுக மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன், காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் ராஜேந்திரன், சிபிஐ மாவட்டச் செயலாளர் இரா. திருஞானம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் சொக்கா ரவி ,வணிகர் சங்க பேரவை நகரச் செயலாளர் வாசு, தமிழர் தேசிய முன்னணி அயனாவரம் முருகேசன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

கும்பகோணம்: 
இதே கோரிக்கையை வலியுறுத்தி கும்பகோணம் ரயில் நிலையம் முன்பு அனைத்துக் கட்சியினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் சு.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை. பாண்டியன், குடந்தை ஒன்றியச் செயலாளர் பி.ஜேசுதாஸ், நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் பார்த்தசாரதி, நகரக்குழு உறுப்பினர் ராஜகோபாலன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழருவி, திராவிடர் கழக நகரச் செயலாளர் பி.ரமேஷ், சிபிஐ குருசாமி, காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் லோகநாதன், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராஜ்முகம்மது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.