சண்டிகர், பிப்.25-
ஹரியானா மாநில பள்ளிகளில் பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் காயத்ரி மந்திரம் உச்சாடனம் செய்வது கட்டாயம் என்று அம்மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராம் அபிலாஸ் சர்மா கூறியுள்ளார்.

ஹரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் அரசு பதவியேற்றதிலிருந்தே, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களின் வரிசையில், இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் காலை இறைவணக்கத்தில் பகவத் கீதைசுலோகங்களை கூற வேண்டும் என்றும் மனோகர் லால் கட்டார்அரசு உத்தரவிட்டது. தற்போது, பள்ளிகளில் காயத்ரி மந்திர உச்சாடனத்தையும் காலை இறை வணக்கத் தில் கட்டாயமாக்க முடிவு செய்துள்ளது. “ஹரியானா மாநில பள்ளிகளில் பகவத் கீதை சுலோகம் சேர்க்கப்பட்டதால் மாணவர்களிடம் நல்லொழுக்கம் வளர்ந்துள்ளது; இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது; ஆகவேதான், இறை வணக்கத்தில் காயத்ரி மந்திரத்தையும் சேர்க்க முடிவுசெய்துள்ளோம்” என்று மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராம் பிலாஸ் சர்மாகூறியுள்ளார்.இதுதொடர்பான சுற்றறிக்கை, பிப்ரவரி 27-ஆம் தேதி பள்ளிகளுக்கு அனுப்பப்படும்என்றும் அவர் தெரிவித்துள் ளார். பள்ளி மாணவர்களின் கல்வி, ஒழுக்கம், பண்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் மனோகர் லால் கட்டாரும், தன் பங்கிற்கு காரணத்தைக் கண்டுபிடித்துக் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: