எண்ணம், பேச்சு, செயல்பாடு, உடல் உறுப்புகளின் இயக்கம் என அனைத்துக்கும் காரணமாக இருப்பது நமது மூளையே, தலைப்பகுதியில் இயற்கையாகவே பாதுகாப்பாக அமைந்துள்ள இதில் பெருமூளை, சிறுமூளை, முகுளம் என மூன்று முக்கிய பாகங்கள் உண்டு. இதைத் தவிர பிரைன்ஸ்டம், தண்டுவடம் என்ற பகுதிகளும் உண்டு.

எழுதுதல், பேசுதல், எண்களை நினைவு கொள்ளுதல், உடல் இயக்கம் போன்றவற்றை மூளையின் இடதுபக்கமும், கலை, இயக்கம், உணர்தல் ஆகியவற்றைக் கண்காணிக்கும் பணியை வலதுபக்க மூளையும் செய்கின்றன. மூளையைச் சுற்றியுள்ள பகுதி மண்டை ஓடு.

பெருமூளை, மூளையின் பெரிய பகுதியாகும். உடல் உஷ்ணம், இயக்கம், பார்வை, கேட்பது, தொடுதல், கற்றுக் கொள்ளுதல், முடிவெடுப்பது, பிரச்சனைகளைத் தீர்க்கும் வழி காண்பது உள்ளிட்ட முக்கிய பணிகளை இது கவனிக்கிறது. உடல் அசைவு, சுய உணர்வு போன்றவற்றை சிறுமூளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

உணவின் பங்கு

நினைவாற்றல், உணர்ச்சி வசப்படுதல், மனச்சோர்வு, முரட்டுத்தனம் இவைகள் அனைத்தும் நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள கார்போஹைடிரேட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்களைச் சார்ந்தே உள்ளன. அமெரிக்காவின் கேம்பிரிட்டிஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வில், ஆரோக்கியமாக உள்ள ஒருவருக்கு சத்துக்கள் குறைந்த உணவைக் கொடுத்தபோது அவரின் மூளை செயல்பாடு வேகம் குறைந்து காணப்பட்டது. அதே நபருக்கு சத்தான உணவுகளைக் கொடுத்தபோது மூளை மீண்டும் வீரியத்துடன் செயல்பட்டது கண்டறியப்பட்டது.

இதற்குக் காரணம் சில ரசாயனப் பொருட்களை நரம்பியல் கடத்திகள், செல்கள் வழியாக மூளைக்குக் கடத்திச் சென்றது கண்டறியப்பட்டது. இதற்கு தேவையான கச்சாப் பொருளாக சில உணவுப் பொருட்கள் பயன்படுகின்றன. இதனை முன்னோடி என்பர். நாம் உண்ணும் உணவு பல்வேறு வேலைகளைச் செய்யும் கடத்திகளை உண்டாக்குகிறது.

புரத உணவில் டிரிப்டோபென் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இது மனதை சாந்தப்படுத்தி, நல்ல உறக்கத்தைத் தரும். டைரோசின் என்ற அமினோ அமிலத்திலிருந்துதான் டோபாமைன் மற்றும் நார் எபிநெபிரின் மூளைக்குப் புத்துணர்வு, ஆபத்து குறித் எச்சரிக்கை உணர்வைத் தரும். அதே நேரத்தில் கார்போஹைடிரேட் மூளையின் செயல்பாட்டைக் குறைக்கிறது.

எனவே, சர்க்கரை, ஐஸ்கிரீம், அரிசி சோறு, மாமிசம், இனிப்பு, கேக் இவைகளை உணவில் அதிக அளவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். கீரை, பச்சைக் காய்கறிகள் மூளையின் செயல்பாட்டை அதிகப்படுத்துவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. போன்னிபிரிஸ் எனும் மனநல மருத்துவர் கார்ப்போஹைடிரேட் உருவாக்கும் மந்த நிலையை மாற்றவே புரதம் உதவுகிறது என்கிறார்.

காபி: தொடக்கத்தில் மூளையைத் தூண்டும் சக்தி கொண்டது என்பதால், ஐரோப்பாவில் 1,600 ஆம் ஆண்டுகளில் மருந்துக் கடைகள் மூலமே காபி வழங்கப்பட்டு வந்தது. காபி அருந்துவதால் மூளை தூண்டப்படுகிறது என்பது உண்மைதான். இதனால் மூளை செல்கள் எப்போதும் துடிப்புடன் இருக்கும். ஆனால் தொடரந்து அதிக அளவில் காபி குடிப்பதால் மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப்படலாம். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் காப்பி மட்டுமே அருந்தலாம்.

போரான் எனும் அரிய தாதுப் பொருள் மூளையில் மின்சார செயல்பாட்டை உருவாக்கும். நாம் சாப்பிடும் உணவில் போரான் அளவு குறைந்தால் மூளையின் செயல்பாட்டில் சரிவு ஏற்படும். தினமும் 3 மி.கி. போரான் சத்துள்ள உணவு சாப்பிடுவதால் மூளை அலையின் வேகம் அதிகரிப்பதை மூளை வரைவு மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வால்நட், பாதாம்பருப்பு, தண்டுக்கீரை, புரோகோலி, ஆப்பிள், திராட்சை, பேரிக்காய், இவற்றில் போரான் அதிகம் உள்ளது. 3.5 அவுன்ஸ் நிலக்கடலைப் பருப்பு, ஓர் ஆப்பிள் சாப்பிடுவதால் 3 மி.கி. போரான் நமது உடலில் சேருகிறது. ஈரல், பால், பாதாம், தானியம் இவற்றில் ரிபோபிளவின் இருப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும். தையமின், கரோடின், இரும்புச் சத்து, ரிபோபிளவின் போன்ற சத்துக்கள் வயதானவர்களுக்கு நினைவாற்றலைத் தக்க வைத்துக் கொள்ள உதவும்.

கரோடின் : கரும்பச்சை காய்கறி, கீரை, ஆரஞ்சுநிறம் கொண்ட பழங்கள், காரட், ஈரல், மீன், பச்சைக் காய்கறிகளில் இரும்புச் சத்து உள்ளது.

துத்தநாகம்: மீன், தானியங்கள், முழுப் பருப்பு, பசலைக் கீரை இவற்றில் அதிக அளவில் துத்தநாகம் உள்ளது. நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது.

தாய்ப்பால் : தாய்ப்பால் குடித்து வளர்ந்தவர்களைவிட புட்டிப்பால் குடித்து வளர்ந்தவர்களிடம் மூளையின் செயல்பாடு குறைந்தே காணப்படும். காரணம் தாய்ப்பாலில் உள்ள சில அரிய பொருட்கள் மூளை செயல்பாட்டிற்கு உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. புட்டிப்பால் குடித்த குழந்தைகளிடம் ஐ.கியு.,(I.Q.,) 93.1 சதவீதமும், தாய்ப்பால் குடித்த குழந்தைகளிடம் 103.7 சதவீதமும் இருந்தது ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மது வேண்டாமே: மது அருந்துவதால் மூளை பழுதடையும். தொடர்ந்து மது அருந்துபவர்களிடம் எம்ஆர்ஐ(MRI), பிஈடி(PET) சோதனை மூலம் ஆய்வு மேற்கொண்டதில், அவர்களின் மூளை சுருங்கி, பெருமூளையில் பாதிப்பு, வளர்சிதை மாற்ற குறைபாடு காணப்பட்டது. 30 வயது ‘குடி’ மகனின் மூளை, 50 வயது உள்ளவரின் மூளை போல காட்சி அளித்தது. எனவே மது அருந்துவதைத் தவிருங்கள். நமது அன்றாட செயல்பாட்டில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் மூளை சிறப்பாகச் செயலாற்ற சத்தான உணவுகளைச் சாப்பிட்டு, தேவைற்ற சிந்தனைகளை ஒதுக்கி ஒளிமயமான வாழ்க்கை வாழ்வோம்.

Leave A Reply

%d bloggers like this: