கண்ணூர், பிப்.25-
கேரள மாநில துறைமுக அமைச்சர் ராமச்சந்திரன் கடனப்பள்ளி மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.  கண்ணூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடந்த இத்தாக்குதலுக்கு திருச்சூரில் நடை பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஞாயிறன்று காலை எட்டு மணியள வில் கண்ணூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகில் உள்ள காபி ஹவுசிற்கு அமைச்சர் ராமச்சந்திரன் கடனப்பள்ளி சென்றுள்ளார். அப்போது ஆட்சியர் அலு வலகம் எதிரில் போராட்டப்பந்தலில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் கும்பலாக வந்து அமைச்சர் மீது தாக்குதல் நட த்தினர். காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு அமைச்சரை காப்பாற்றினர். அமைச்சர் ராமச்சந்திரன் கடனப் பள்ளி மீதான தாக்குதலை கண்டித்து திருவனந்தபுரம் ரத்தசாட்சிகள் மண்டபத்தி லிருந்து இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) சார்பில் ஞாயிறன்று மாலை ஊர்வலம் நடைபெற்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.