உதகமண்டலம், பிப். 25-
நீலகிரி மாவட்டம் உதகை அருகே மலைக் கிராமத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானையால் பொதுமக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.

கடநாடு ஊராட்சிக்குட்பட்ட அணிக்கொரை, தூனேரி கிராமத்தில் கடந்த 5 நாட்களாக ஒற்றை ஆண் காட்டு யானை முகாமிட்டுள்ளது. இந்த யானை பகல் நேரங்களிலேயே விளை நிலங்களுக்குள் புகுந்து காய்கறிகளை சேதப்படுத்தி வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர் தீ மூட்டியும், பட்டாசுகள் வெடித்தும் கிராம மக்கள் உதவியுடன் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். எவ்வளவு தான் விரட்டினாலும் அந்த யானை அப்பகுதி யிலேயே உலவுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். யானையை விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து இத்தகைய நிலை பல கிராமங்களில் ஏற்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.