ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் பேய்களை விரட்டுவதற்காக பூஜை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக ஆளும் ராஜஸ்தானில் 200 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலான உறுப்பினர்கள் குற்ற வழக்குகளில் சிறை செல்வது அதிகரித்து வருகிறது. இதனால் சிலர் ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பேய்கள் உலாவுவதுதான் காரணம் என்று நம்பிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேய்களை விரட்ட பூஜை செய்துள்ளனர்.

கடந்த 2001ம் கட்டிமுடிக்கப்பட்ட சட்டப்பேரவை அமைந்துள்ள இடம் முன்னர் சுடுகாடாக இருந்ததாகவும் அங்கு உலவிய ஆவிகள் தற்போது சட்டபேரவையில் திரிவதாகவும் எம்எல்ஏக்கள் நம்புகின்றனர். இந்த அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க முடிவு செய்த பாஜக எம்எல்ஏக்கள், முதலமைச்சர் வசுந்தரா ராஜேவிடம் முறையிட்டு, பேய்களை விரட்ட பிரத்தேக பூஜைகளை நடத்தி உள்ளனர்.

Leave A Reply