புதுதில்லி,
நீட் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பில் மாற்றம் செய்யக் கோரிய மாணவர்களின் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நீட் தேர்வை எழுத குறைந்த பட்சம் வயது வரம்பு 17 ஆகவும் அதிகபட்சம் 25 ஆகவும் இருக்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) நிர்ணயித்துள்ளது. எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பில் 30.

இந்நிலையில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு மட்டும் அதிகபட்ச வயது வரம்பு 25 ஆக நிர்ணயிக்கப்பட்டிருப்பதை மாற்றி அமைக்கக் கோரி சில மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

“அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் மருத்துவம் போன்ற படிப்புகளைப் படிக்க அதிகபட்ச வயது வரம்பு என்று எதுவும் இல்லை. ஆனால், இந்தியாவில் 25 வயதைக் கடந்தால் மருத்துவப் படிப்புக்கு தகுதி இல்லை என்ற நிலை உள்ளது.” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், சி.பி.எஸ்.இ. எடுத்த முடிவில் தலையிட முடியாது என்று கூறியதுடன் இந்த வழக்கு விசாரணைக்கு உரியது அல்ல் குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்தது

Leave A Reply

%d bloggers like this: