தமிழகத் தொழிலாளர்களை கண்மூடித்தனமாக தொடர்ந்து கொன்றுகுவித்து வரும் ஆந்திர போலீசாருக்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர்களது மர்ம மரணங்கள் குறித்துசிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழகத்தை சார்ந்த கூலித் தொழிலாளர்கள் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டார்கள் என காரணம் கூறி தொடர்ந்து ஆந்திர போலீசார் படுகொலை நடத்திவருகின்றனர்.
செம்மரக் கடத்தலில் ஈடுபடும் கடத்தல் பேர்வழிகள் மீது சிறுநடவடிக்கைகூட எடுக்காத ஆந்திர காவல்துறையினர் தமிழகத் தொழி லாளர்களை கொன்று குவிப்பதும், பலஆயிரம் பேரை சிறையில் அடைத்து சித்ரவதை செய்து வருவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. ஆந்திர போலீசாரின் மனித உரிமை களைப் பறிக்கிற இக்கொடூரச் செயல் களை தடுத்து நிறுத்த தமிழக அரசு தவறுவதன் மர்மம் புரியவில்லை.கடந்த ஆண்டுகளில், 20க்கும் மேற்பட்ட தமிழகத் தொழிலாளர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பான மர்மங்கள் வெளிவராத நிலையில், தற்போது மேலும் ஐந்து தொழிலாளர்களின் பிணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
சேலம் மற்றும் விழுப்புரம் கல்வராயன் மலையில் உள்ள ஆதிவாசிமக்களுக்கு வன உரிமை சட்டத்தின்படிதமிழக அரசு நிலம் வழங்க தவறிய தாலும், மாற்று வேலை வாய்ப்பு இல்லாததாலும் இங்குள்ளவர்கள் புலம் பெயர்ந்து அண்டை மாநிலங்களுக்கு தினக்கூலி தொழிலாளர்களாக சென்று வருகின்றனர். அந்த வகையில், சேலம் கல்வ ராயன் மலை கிராம மக்கள், புரோக்கர்கள் மூலமாக தினக்கூலி வேலைக்கு சென்றுள்ளனர். குறிப்பாக, கல்வராயன் மலையில் உள்ள பட்டிமேடு, ஆவாரை, கிராங்காடு, கல்லூர் , சேம்பூர், அடியனூர், மூலக்காடு போன்ற கிராமங் களில் உள்ள சுமார் 70 பழங்குடி இன கூலித் தொழிலாளர்கள் ஆந்திரமாநிலம், கடப்பா மாவட்டத்திற்கு, டிப்பர் லாரி மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். டிப்பர் லாரியில் ஏற்றிச்செல்லும்போது, ஆந்திராவனத்துறையினரால் விரட்டியடிக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். பின்னர், சிதறியோடிய பழங்குடி மக்களில் 5 பேர்களின் பிணங்கள் 19.2.2018 அன்று கடப்பா மாவட்டம் ஒண்டிபிட்ட ஏரியில் மிதந்து மேலே வந்துள்ளன. அடியனூரைச்சேர்ந்த முருகேசன்(42), ஜெயராஜ்(25), கிரான்காவைச்சேர்ந்த முருகேசன்(42), , சின்னப்பையன்(45), கீழாவாரையைச் சேர்ந்த கருப்பண்ணன்(23) ஆகிய 5 பேர்களது உடல்கள் காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டு, 22.2.2018 அன்று உறவினர்கள் ஒப்புதல் இல்லாமலேயே அவசரகதியில் பிரதே பரிசோதனை செய்யப்பட்டு, அதிகாலையில் அவர்களது சொந்த கிராமத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, அரை மணி நேரத்திற்குள் ஒருவரை எரித்துள்ளனர். மற்றவர்களை புதைத்து அடக்கம் செய்துள்ளனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறல் மற்றும் சட்டவிரோத செயலாகும்.
ஆந்திர காவல்துறையினரின் இந்த அராஜகநடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு தமிழக தொழிலாளர்கள் ஆந்திர போலீசாரால் குருவிகளைப்போல, கொன்று குவிக்கப்படும் சூழ்நிலையில், இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை தட்டிக்கேட்க வேண்டிய தமிழக அரசும், காவல்துறையும் இந்த அராஜகத்திற்கு துணைபோவதற்கு சிபிஐ(எம்) தன்னுடைய வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. மீதியுள்ள 60க்கும் மேற்பட்ட அப்பாவி மலைவாழ் மக்கள் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனரா அல்லது வனத்துறையினரிடம் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனரா என்று இதுவரை தெரியவில்லை என்று ஆந்திர காவல்துறையினரிடமிருந்து தப்பிய ஒருவரான கிராங்காட்டைச்சேர்ந்த முருகேசன் தெரிவித்துள்ளார்.
எனவே, தமிழ்நாடு அரசு, சேலம்கல்வராயன் மலையை சேர்ந்த, மர்மமான முறையில் மரணமடைந்த 5 பழங்குடி மக்களின் குடும்பங்களுக்கும், காணாமல் போயுள்ள 65 பேர்களுக்கும் நீதி கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும், இது குறித்து சிபிஐ விசார ணைக்கு உத்தரவிட வேண்டும். இருமாநில அரசுகளும் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூபாய் 25 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டுமெனவும், பொய் வழக்கு புனையப்பட்டு ஆந்திர சிறையில் உள்ள 2000க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக – ஆந்திர அரசுகளை வலியுறுத்துகிறது.
மேலும், இத்தகைய சம்பவங்கள் தொடராமல் இருக்க வன உரிமைச்சட்டத்தினை முழுமையாக அமல்படுத்த வேண்டுமெனவும், 100 நாள்வேலைத்திட்டத்தினை அனைத்து மலை கிராமங்களிலும் அமல்படுத்து வதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டுமெனவும், மலைப்பகுதிகளில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிட அரசு திட்டமிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மாநில அரசை வலியுறுத்துகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.