யூஜிசி-யின் கீழ் செயல்படும் மத்திய, மாநில மற்றும் இணைப்பு கல்லூரிகளில் பணிபுரியும் துணை பேராசிரியர்கள் பதவி உயர்வு பெற 3 ஆசிரியர் பயிற்சி வகுப்புகளில்( 1 Orientation course & 2 Refersher course) கலந்து கொள்ள வேண்டும்.

இந்த வகுப்புகள் யூஜிசி-யின் கீழ் செயல்படும் மனித ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் மூலமாக பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடத்தப்படுகிறது.

மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கும் அளவுக்கு திறமையை மேம்படுத்து கொள்வதற்கும், அவர்கள் சார்ந்த துறையில் தங்களை தாங்களே மேம்படுத்திக் கொள்ளவும் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

பொதுவாக இந்த மையம் பயிற்சி வகுப்பு நடத்தப்படும் பகுதியில் உள்ள அறிவுசார் வளங்களை வைத்தே இந்த வகுப்புகளை நடத்துகின்றன.

மனித ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் மூலமாக தில்லியில் நடத்தப்படும் இந்த வகுப்புகளில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பலர் விண்ணப்பம் செய்வார்கள். குறிப்பாக ஐஐடி, ஜெஎன்யூ போன்ற பல்கலைக்கழக வல்லுநர்கள் பாடம் நடத்தும் போது பலர் இதில் ஆர்வமுடன் கலந்துகொள்வர்.

சமீப காலமாக யூஜிசி-யின் கீழ் செயல்படும் இந்த மனித ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் மீது சில சர்ச்சைகள் எழுந்துள்ளது. உதாரணமாக, ஜெஎன்யு பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 2016, பெண்களின் கல்விக்கான மையம்  (center for women’s studies) கீழ் செயல்பட்டு வந்த ஒரு ரெப்ரெஷர் கோர்ஸ் தற்போது ஸ்கூல் ஆப் இண்டர்நேஷனல் ஸ்டடீஸ்-க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த வகுப்புகளை நடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்றுனர்கள் பெரும்பாலானோர் இந்து வலது சாரி அமைப்புகளை சேர்ந்தவர்கள். பயிற்சி வகுப்பு பாடத்திட்டம் குறித்து ஆட்சேபணை தெரிவிக்கும் பங்கேற்பாளர்கள் தங்களது பதவி உயர்வுக்கு பயந்து அதை வெளிப்படையாக சொல்ல தயங்குகின்றனர்.

கடந்த சில வருடங்களாக தில்லி பல்கலைக்கழகத்தில் மனித ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தின் கீழ் செயல்படும் உயர் கல்வி நிபுணத்துவ அபிவிருத்தி மையத்தின் (Professional Development in Higher Education ) ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் உடன் வெளிப்படையான தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

CPDHE director Gita Singh with RSS chief Mohan Bhagwat at an event organised by Indresh Kumar, seen in the photo on the right. Credit: vishwagram Facebook page

உயர் கல்வி நிபுணத்துவ அபிவிருத்தி மையத்தின் இயக்குநர் கீதா சிங் அவர்களுக்கு , ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட விஷ்வாகிராம் அமைப்பு மூலமாக ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர் இந்திரேஷ் குமாருடன் தொடர்பு இருக்கிறது. கீதா சிங், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மற்றும் இந்திரேஷ் குமார் உடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சில விஷ்வாகிராம் இணையதளத்திலும் , பேஸ்புக் பக்கத்திலும் இருக்கிறது.

20988181_510632229282130_1435230097939725980_o
கீதா சிங்-கிற்கு பரந்து விரிந்த நட்பு வட்டாரங்கள் இருந்த போதிலும், 2017, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடந்த 4 பயிற்சி வகுப்புகளில் (இரண்டு ஓரியண்டேசன் மற்றும் இரண்டு ரெப்ரெஷர் கோர்ஸ்களில்) ஆர்.எஸ்.எஸ்.சின் முத்திரை மிகத் தெளிவாக தெரிந்தது.

2017 பயிற்சி வகுப்பின் போது சிங் உடன் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட பாரத் சிக்‌ஷான் மண்டல் அமைப்பை சேர்ந்த முகுல் கனித்கர்

நாடு முழுவதிலும் இருந்து சுமார் 250 ஆசிரியர்கள் பங்கேற்ற இந்த வகுப்புகளில் கல்வி சார்ந்த பாடத்திட்டம் அல்லாமல் அரசியல் சார்ந்த பாடத்திட்டமே வழங்கப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவர் கூறுகையில், யூஜிசி-யின் விதிகள் மீறப்பட்டு 4 ஆசிரியர்கள் வேறு அமர்வுகளுக்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டனர் என்றார்.

கல்வியாளர்கள் அல்லாத ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா அமைப்புகளை சேர்ந்த அரசியல்வாதிகளே வகுப்புகளை நடந்த அழைக்கப்பட்டிருந்தார்கள் என பங்கேற்பாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

டில்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கூறுகையில், இந்த வகுப்புகளுக்கு சம்பந்தமே இல்லாத ஏபிவிபி மாணவர்கள் பலர் இந்த வகுப்புகளில் கலந்து கொள்வதற்காக அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இந்தியா மற்றும் அதன் கலாச்சாரம் மீது தான் அதிக கவனம் செலுத்துவது தான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது. காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் இருந்து கலந்து கொண்ட ஆசிரியர் ஜாவத் அகமது கூறுகையில், இங்கே பேசிய பேச்சாளர்களின் பெரும் பகுதியினர் மதச்சார்ப்பற்றவர்கள், மார்க்சிஸ்ட் அறிவுஜீவிகள், சுதந்திர சிந்தனையாளர்கள், ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம், மற்றும் மேற்கத்திய நாகரீகம் குறித்து கடுமையாக தாக்கி  பேசினர். மேலும் காங்கிரஸ் கட்சி மற்றும் ஜவஹர்லால் நேருவை பற்றி மிக மோசகமாக பேசினர் என்று தெரிவித்தார்.

தில்லி பல்கலைக்கழகத்திற்கு உட்படட இந்து கல்லூரியின் வரலாற்று ஆசிரியர் ரச்னா சிங் கூறுகையில், சீன பொருட்களுக்கு முத்தலாக் என்றும், இந்தியாவில் தன் உயிர்துறப்போம் என கோஷம் எழுப்பிய பேச்சாளர்களுக்கு, எழுந்து நின்று மரியாதை செலுத்துமாறு பங்கேற்பாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர் ஒருவர் உச்சகட்டத்தின் எல்லைக்கே போய் பாபர் மசூதி இடிக்கப்பட்டது நியாயமானது என்றும், அந்த இடத்தில் கோவில் கட்டப்படும் என சத்தியம் செய்தது மிக அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளது.

”பாரத் போத்” என்ற வகுப்பில் இந்தியா, கலாச்சார, வரலாறு குறித்து கூறப்பட்ட தகவல்கள் யாவும் தெளிவற்றவையாக இருந்தது. தில்லி பல்கலைக்கழகத்தின் வரலாற்று பேராசிரியர் அர்பனா பாலச்சந்தரன் கூறுகையில், இந்து மதம் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது. புத்த மதம், ஜெயின், சீக்கிய மதங்கள் கூட முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டது. கிருஸ்துவ மதத்தை பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒப்பிட்டும், இஸ்லாம் மதத்தை தவறான முறையிலும் சித்தரித்து பேசினர் என்றார்.

இந்தியாவின் பழமையான கடந்த காலம் குறித்த வகுப்புகளை நடந்த தில்லி பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு வல்லுநர் கூட அழைக்கப்படவில்லை.

நாட்டில் உள்ள 22 மாநிலங்களில் இருந்து பல மொழி பேசும் ஆசிரியர்கள் பங்கேற்ற போதிலும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பேச்சாளர்களை இந்தியில் உரை நிகழ்ந்த ஊக்கப்படுத்தினர். இந்தி தெரியாத ஆசிரியர்கள் பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை. மேலும் பலர் சமஸ்கிருதத்தில் பேசியதில் இந்தி பேசுபவர்களுக்கே அதை புரிந்து கொள்வதில் சிரம் இருந்ததாக பலர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்ட இரண்டு வகுப்புகள் ஒன்று அறிவியல் மற்றொன்று வரலாறு. ஆர்.எஸ்.எஸ். சின் அறிவியல் அமைப்பான விஜினா பாரதியை சேர்ந்த பேச்சாளர் ஒருவர் பேசுகையில், பண்டைய இந்திய நூல்கள் அனைத்தும் விஞ்ஞான அறிவியல்களின் களஞ்சியமாகும். மேற்கத்திய விஞ்ஞானிகள் இந்த சாதனைகளைப் தங்களுடையது என பொய்யாக கூறி வருகின்றனர்.

உதாரணமாக புவி ஈர்ப்பு விசை கோட்பாடு ஆர்யபட்டாவுடையது. லிச்சி பழம் அவர் தலையில் விழுந்த போது அது வெளிப்பட்டது. ஆனால் நியூட்டன் அதை திருடி தன்னுடைய கோட்பாடு என்கிறார். லிச்சி பழத்திற்கு பதிலாக ஆப்பிள் பழம் என்று மாற்றிவிட்டதாக ஒரு பேச்சாளர் கூறினார்.

நூல்களில் குறிப்பிட்ட வேற்றுமையல்லாத பண்டைய கடந்த கால குறிப்புகளில் இருந்து தான் இந்தியாவின் அடையாளம் மற்றும் சாராம்சங்கள் பெறப்பட்டது. சாதி போன்ற சமூக பிரச்சனைகளுக்கு இட்டுச்செல்லும் என்பதாக கூறி இந்தியாவில் முஸ்லீம் ஆட்சி குறித்து தகவல்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டது.

தற்போது தலித் சமூகம் நடத்தப்படுவதை போல, அன்று இஸ்லாம் மதத்திற்கு மாற மறுப்பு தெரிவித்தவர்கள் கொல்லப்பட்டனர் என ஒரு பேச்சாளர் கூறினார்.

வேறு மாநிலங்களில் இருந்து இந்த வகுப்புகளில் கலந்து கொண்டவர்கள் மிகுந்த ஏமாற்றத்தை அடைந்ததாக கூறினர். மேலும் பங்கேற்பாளர் ஒருவர் கூறுகையில், பலர் தங்களது சான்றிதழ், மதிப்பெண்களுக்காக ஏதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தனர். அரசு டிகிரி கல்லூரி ஆசிரியர் அஜாஸ் அகமது கூறுகையில், என் வாழ்க்கையில் முதன்முறையாக எந்த கேள்வியும் கேட்க முடியாத கைதி போல நடத்தப்பட்டேன் என்றார்.

2016 பயிற்சி வகுப்பின் போது இந்திரேஷ் குமாருடன் கீதா சிங்

இது குறித்து கீதா சிங்கிடம் கேட்ட போது, இந்தியதுவத்தை ஊக்குவிப்பது தான் எங்களது பாடத்திட்டத்தின் நோக்கம். பல்கலைக்கழகங்களின் தற்போதைய வளர்ச்சி, ரோகித் வெமுலா மரணத்தை அடுத்து நடந்த போராட்டம், ஜேஎன்யு , போன்றவற்றை மனதில் வைத்து தான் இதை தயாரித்தோம். எங்களது வளாகத்தை சுத்தப்படுத்த விரும்புகிறோம். அதனால் தான் இது போன்ற வகுப்புகளை நடத்துகிறோம் என்றார்.

புகழ்பெற்ற வரலாற்றாளர் தாரா சர்கார் கூறுகையில், இந்த பாடத்திட்டத்தை பற்றி நான் கேள்விப்பட்டவுடன் நான் மிகவும் நொந்து போனேன். கல்லூரி ஆசிரியர்களிடையே பயிற்சி வகுப்பு என்ற பெயரில் இது போன்ற பொய் மற்றும் தீய பிரச்சாரம் செய்வது நாட்டின் உயர் கல்வி நிலையை மிகவும் பாதிக்கும் என அச்சமாக உள்ளது என்றார்.

நன்றி : https://thewire.in/225256/hindutva-politics-command-du-complaints-mount-disorientation-teachers/
தமிழில் : ஆர்.சரண்யா

Leave a Reply

You must be logged in to post a comment.