சென்னை,

சென்னை ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த யமுனா சிகிச்சை பலனிற்றி   உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மடிப்பாக்கம் அருகே வாணுவம்பேட்டையில் ஸ்ரீ பாலாஜி ரத்தப் பரிசோதனை மையம் என்ற தனியார் ரத்தப் பரிசோதனை நிலையம் உள்ளது. இதன் உரிமையாளர் ராஜா (40), இவரது ரத்தப் பரிசோதனை மையத்தில் யமுனா (33) செவிலியராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில்  கடந்த ஞாயிற்றன்று யமுனாவை ராஜா வேலைக்கு அழைத்துள்ளார்.

யமுனா வேலைக்கு வந்துள்ளார். மதியம் 1 மணி அளவில் இளம்பெண் யமுனா அலறி கூச்சலிடும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ரத்தப் பரிசோதனை மையத்திற்குள் ஓடிச்சென்று பார்த்துள்ளனர். அப்போது தீப்பற்றிய நிலையில் யமுனா துடிப்பதைப் பார்த்து தீயை அணைத்து யமுனாவை மீட்டுள்ளனர்.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் யமுனா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 46 சதவீத பலத்த தீக்காயத்துடன் யமுனா அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். உடனடியாக இந்த சம்பவம் குறித்து மடிப்பாக்கம் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அங்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தியதில் யமுனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உரிமையாளர் ராஜா அவர் மீது ரத்தப் பரிசோதனை மையத்தில் உள்ள ஆசிட்டை ஊற்றியதும், பின்னர் அவர் மீது தீவைத்து எரித்ததும் தெரியவந்தது.

ஸ்பிரிட் ஊற்றி யமுனாவை எரித்த ராஜாவை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யமுனா சிகிச்சை பலனின்றி பரிதாபாமாக உயிரிழந்தார்.  யமுனாவிற்கு காதல் திருமணம் நடைபெற்று நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: