திருவனந்தபுரம்,
கேரளா மாநிலம் அட்டப்பாடியில் உயிரிழந்த பழங்குடியின இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அகாலி நகரில் பழங்குடியின இளைஞர் ஒருவர் கடைகளில் உணவுப் பண்டங்களைத் திருடியதாக அப்பகுதிவாசிகள் வியாழக்கிழமை குற்றம்சாட்டினர். இதைத் தொடர்ந்து அவர்கள் கூட்டாகச் சேர்ந்து அவரைத் தாக்கினர். அதன் பின் அவரை போலீஸாரிடம் அவர்கள் ஒப்படைத்தனர். எனினும், போலீஸார் அந்த இளைஞரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

இதனிடையே, மேற்கண்ட இளைஞரை ஒரு கும்பல் அடிக்கும் காட்சிகள் கேரளத்தில் சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் வேகமாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்தச் சம்பவத்துக்கு பழங்குடியின ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பழங்குடியின இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துக்ககு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது கேரளத்தின் முற்போக்கு சமூகம் மீது படிந்துள்ள கறை என்று அவர் விமர்சித்தார்.  பழங்குடியின  இனத்தைச்சேர்ந்தவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையல் உயிரிழந்த மதுவின் குடும்பத்திற்கு பினராயி விஜயன் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: