வரும் 2019 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படும் என மத்திய பாஜக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் உண்மையில் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்பதே உண்மை.

2019 ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க வேண்டுமானால் மாதம் ஒன்றிற்கு 27 லட்சம் வீடுகளுக்கு மேல் மின்இணைப்பு வழங்க வேண்டும்.

மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் பிப்.6,2018 அன்று மாநிலங்களவையில் அளித்த தகவல் படி, நாடு முழுவதிலும் கிராமப்புறங்களில் உள்ள 78% மேலான வீடுகளில் மின்சாரம் உள்ளது.

நாட்டில் உள்ள கிராம மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கு ரூ.16,320 கோடி மதிப்பில் மின்சாரம் வழங்கும் சவுபாக்கியா என்ற திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். இந்த திட்டதின் மூலமாக 2011 ஆண்டு முதல் வீடுகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டதின் கீழ் வராத வீடுகளுக்கு 10 மாத தவணையில் ரூ.500-க்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு மின்சார கம்பங்கள் மூலமகவேஅல்லது சோலார் சக்தி மூலமாகவே மின்சார வழங்கப்பட்டு வருகிறது.

செப்டம்பர் 25,2017 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட சவுபாக்கிய திட்டம் மூலமாக கிடைத்த தகவல் படி, கிராமப்புறங்களில் உள்ள 80% வீடுகளில் மின்சார வசதி உள்ளது. மீதமுள்ள 20% வீடுகளுக்கு மின்சாரம் வழங்க 4 வருடம் 7 மாதங்கள் ஆகும்.

கடந்த 4 மாதங்களில் சவுபாக்கியா திட்டத்தின் மூலமாக 26 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ தகவல்படி, மின்வசதி இல்லாத 18,452 கிராமங்களில் 16,341 கிராமங்களுக்கு மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

எனர்ஜி ஆக்சஸ் அவுட்லுக் 2017 அளித்த தகவல் படி, பிரேசில் நாட்டின் மக்கள் தொகையை விட அதிகமான எண்ணிக்கையில் , இந்தியாவில் 2016 ஆம் ஆண்டில் 23.9 கோடி பேர் மின்சார வசதி இல்லாமல் தான் உள்ளனர்.

டிசம்பர் 7, 2017 ஆம் தேதிப்படி, கிராம மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள 4 கோடிக்கும் மேலான வீடுகளில் மின் வசதி இல்லை.

அதிகபட்சமாக டிசம்பர் 2017 அன்று சராசரியாக நாள் ஒன்றுக்கு 6,774 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செயல்பட்டால், மத்திய அரசின் நோக்கத்தை அடைய 14 வருடங்கள் ஆகும்.

ஐஇஏ 2017 புள்ளிவிவரங்கள் படி, மின்சாரம் தயாரிப்பதில் சீனா, அமெரிக்காவிற்கு அடுத்த படியாக இந்தியா உள்ளது. இருந்த போதிலும் 2016 ஆண்டு வரை இந்தியாவில் 23.9 கோடி பேர் மின்சார வசதி இல்லாமல் தான் உள்ளனர்.

2000 ஆண்டில் 43% இருந்த மின்சார வசதி 2016ல் 82% அதிகரித்துள்ளது.

கிராமத்தில் உள்ள சுமார் 10 வீடுகள், பொது இடங்களான பள்ளி, பஞ்சாயத்து அலுவலகம், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் மின்சார வசதி இருந்தால் மட்டுமே அந்த கிராமம் மின்சார வசதி உள்ள கிராமமாக கருதப்படுகிறது. கிராமப்புறங்களுக்கு மின் வசதி வழங்குவதில் அரசு 90% வெற்றி அடைந்துள்ளது.

சவுபாக்கியா திட்டம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவது குறித்து மட்டுமே கவனத்தை செலுத்துகிறதே தவிர, அதன் தரத்தை மேம்படுத்த முயற்சி செய்யவில்லை. மின்சார இணைப்பு வழங்குவதும் , மின்சாரம் பெறுவதும் ஒன்றல்ல என புதுதில்லியை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த அதிகாரி அபிஷேக் ஜெயின் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், உத்தரப் பிரதேசம், பிகார், ஒரிசாவில் உள்ள பெரும்பாலான கிராமப்புற மக்கள் மின்சார வசதி இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். 2015, உத்தரப் பிரதேசத்தில் 75% கிராமப்புற வீடுகளில் 12 மணி நேரத்திற்கும் குறைவாகவே மின்சாரம் வழங்கப்பட்டது என்றார்.

சத்தீஸ்கரில் உள்ள 90% ஆரம்ப சுகாதார மையங்களில் வேலை நேரங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படுகிறதாக இந்தியா ஸ்பெண்ட் ஆகஸ்ட் 31, 2017 அன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக நோயாளிகள், லேப்கள், மற்றும் குழந்தை பிறப்பு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக 60% மேலான ஆரம்ப சுகாதார மையங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.