கெட்ட போலீசின் ஜால்ரா

வெறும் 30 மீட்டர் தொலைவிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை ஊர்வலத்திற்காக இடைமறித்ததோடு, தாமதமாக வழிவிட்டனர்.

மயிலேறும் பெருமாள் 
உதவி ஆய்வாளர்
போக்குவரத்து பிரிவு
தூத்துக்குடி

மேற்கண்ட பதிவு தூத்துக்குடி போலீஸ்காரர் ஒருவரால் பூட்டப்பட்ட முகநூல் பக்கம் மற்றும் வாட்ஸ்ஆப்பிலும் உலவவிடப்பட்டிருக்கிறது.

“கெட்டிக்காரன் பொழுது எட்டு நாள் என்பார்கள். கெட்டவர்களின் புழுகு எட்டு நொடி கூட தாங்காது.”

கீழே உள்ளது போலீஸ்காரர் ஒருவரால் தான் தாக்கப்பட்டதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலான FIR. எந்த இடத்திலும் ஆம்புலன்ஸ் பற்றிய குறிப்பு இல்லை. ஓரளவிற்காகவது தூத்துக்குடி, அண்ணாநகர் பிரதான சாலையை தெரிந்தவர்களுக்கு இந்தப் பதிவு எத்தனை நகைப்பிற்கு உரியது விளங்கும். FIR பொய், அதை வலுப்படுத்துவதாகக் கொண்டு மயிலேறும் பெருமாள் பதிவிட்டிருப்பது சூப்பர் பொய்.

உண்மை ஒன்றே ஒன்றுதான். பொய் எத்தனையாகவும் இருக்கலாம். விதவிதமாய் சொல்லிப் பார்க்கிறார்கள். ஒவ்வொன்றையும் அம்பலப்படுத்துவோம்.

மயிலேறும் பெருமாள் கையில் காவல்துறையின் வீடியோ இருக்கக் கூடும். அவர் முழுமையான வீடியோவை வெளியிடத் தயாரா?

இன்னும் ஒவ்வொன்றாய் அம்பலப்படுத்துவோம். ஒவ்வொரு பொய்க்கும் ஒரு விலை வைப்போம்! #RedRally#CPIM

கெட்டுத்தான் போவேன் என்று பெட் கட்டுகிறார் மைலார்ட்…

தூத்துக்குடி தென் பாகம் காவல்நிலைய FIR No: 113/20-02-2018ல் ஒரு சித்தரிப்பு படத்தில் உள்ளது.

அவர்களைக் காப்பாற்றிக் கொள்ள தப்பி ஓடினார்களாம். அப்போது அவர்களை விரட்டி வந்தவர்கள் கீழே விழுந்தார்களாம். அதனால் அவர்களுக்கு அடிபட்டதாம். அப்படி அடிபட்டதை ஓடிக் கொண்டிருந்தவர்கள் எவ்வளவு நுணுக்கமாக கண்ணை பின்பக்கமாகத் திருப்பி கவனித்திருக்கிறார்கள் என்று பாருங்கள். அதில் சில பேர் தவறி கீழே விழுந்தார்களாம்.

கீழே விழுந்ததில் விமலுக்கு தலையில் இடது பக்கம் அடிபட்டதாம். இடது முழங்கை, வலது கால் பாதம் மேல், உதடு ஆகிய இடங்களில் காயம் பட்டதாம்.

விஷ்ணுவரதனுக்கு உச்சந்தலையிலும் முதுகிலும் காயம் ஏற்பட்டதாம்.

உச்சந்தலையிலும் முதுகிலும் ஒரேநேரத்தில் காயம் படும்படி விழுவது அசாத்தியமானது. அப்படி விழுவதை முன்னோக்கி ஓடிக் கொண்டிருந்த ஒருவர் அதுவும் பின்னே ஒரு கூட்டம் விரட்டி வரும் போது, துல்லியமாக இடது வலது உச்சந்தலை பாதம் மேல் என்று படம்பிடித்திருப்பது இன்னும் அசாத்தியமானது.

இதுவெல்லாம் ஏஎஸ்பி செல்வநாகரத்தினம் தன் காவலர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கும் புதிய வித்தைகள். #RedRally #CPIM

Leave A Reply

%d bloggers like this: