பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளைக்காரன் நீரவ் மோடி வெளிநாடு தப்பித்துச் சென்றதும் அல்லாமல், ‘வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகையை திரும்பச் செலுத்துவதற்கு இருந்த வாய்ப்புகளை வங்கி அடைத்து விட்டது. எனது பிராண்டுகளின் மீது இருந்த நன்மதிப்பை கெடுத்து விட்டது” என தெனாவெட்டாக குற்றம் சாட்டுகிறான். இந்த அயோக்கியத்தனத்தை பற்றி பேசக் காணோம்.

ஆட்சியில் இருக்கும் பிஜேபி அரசின் அனுமதியோடு நடந்த கொள்ளை என்பதையும், பிரதமர் மோடி இதுகுறித்து வாயைத் திறக்காமல் இருப்பது குறித்தும் பேசக் காணோம்.

னால் ஊடகங்களோ, ”அதில் சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை” என்பதையே முக்கியச் செய்திகளாய் வெளியிடுகின்றன. கோடிக்கணக்கில் நடந்திருக்கும் பரிவர்த்தனைகளில் அந்த மோசடி LOUக்களில் சம்பந்தப்பட்டது வங்கியின் ஒரு சில உயரதிகாரிகளே. ஆனாலும் ‘ஊழியர் , ஊழியர்’ என்றே பொதுவெளியில் அறிவிப்பது, சாதாரண வங்கி ஊழியர் மீது வெறுப்பை ஏற்படுத்த அல்லது கட்டமைக்க முயற்சிப்பதே ஆகும்.

அதுபோலவே ’பஞ்சாப் நேஷனல் வங்கியின் 18000 ஊழியர்கள் பணி மாற்றம் செய்ய அதிரடி உத்தரவு’ என்று வெளியிடப்படும் செய்திகளில், ‘எதோ இந்த ஊழியர்களால்தான் இவ்வளவு பெரிய மோசடி” நடந்திருப்பது போல சித்தரிப்பதே ஆகும்.

கார்ப்பரேட் கிரிமினல்களை அம்பலப்படுத்தாமல், அப்பாவித் தொழிலாளர்களை இப்படி மோசமாக முன்னிறுத்துவதை முழு நேரப் பணியாகச் செய்கிறது இந்த முதலாளித்துவ அமைப்பு.

Mathava Raj

Leave A Reply

%d bloggers like this: