உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்பாக அம்மாநில முதல்வர் யோகி ஆதியாநாத் தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் தனது அரசின் 10 மாத கால செயல்பாடுகள் குறித்து பேசினார். அப்போது நேரடி பணப்பலன் பெற்றவர்கள், கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலுவை தொகை, விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம், சாதி கலவரங்கள் குறித்து அவர் கூறிய தகவல்களின் உண்மை தண்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன் விவரம் பின்வருமாறு,

கடந்த 10 மாதங்களில், உத்தரப் பிரதேச மாநில அரசு விவசாயிகள் நேரடியாக பயன்பெறும் வகையில் அவர்களுக்கு ரூ.80,000 கோடி வழங்கியுள்ளது. –  ”பொய்யான தகவல்”

பிப்ரவரி 21, 2018 அன்று அரசு பதிவேட்டில் உள்ள தகவல்படி, உத்தரப் பிரதேசத்தில் 2017 -18 ஆண்டில் நேரடியாக பயன்பெறும் திட்டம் மூலமாக விவசாயிகளுக்கு ரூ.14,540 கோடி மட்டுமே  வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு தகவல் படி, இந்த நேரடி பணப்பரிமாற்றத்தின் மூலம்
4.9 கோடி பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர் . ரூ.128 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதன் மூலம் கடந்த மார்ச் 19, 2017 அன்று யோகி ஆதித்யநாத் அம்மாநில முதல்வராக பதவியேற்றார்.

பிப்ரவரி 21,2018 அன்று உள்ள தகவல் படி, 2017 – 18 ஆண்டில் ரூ.1.03 லட்சம் கோடி நேரடி பணப்பலன் மூலம் நாடு முழுவதில் 63.4 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர். 179.7 கோடி பரிமாற்றத்தின் மூலமாக ரூ.57,029 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. மேலும் பாகல் திட்டம், உணவு தானியங்களுக்கான நேரடி பண பரிமாற்றம், அட்டல் பென்சன் யோஜனா திட்டம், போன்ற திட்டங்கள் மூலமாக மத்திய அரசு 40.78 கோடி பயனாளர்களுக்கு ரூ,82,287 கோடி பணப்பரிமாற்றம் செய்துள்ளது.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜன திட்டத்தின் மூலமாக மட்டும் 43.56 கோடி பயனாளிகளுக்கு ரூ.21,062 கோடி வழங்கப்பட்டுள்ளது.

சுலபமாக தொழில் செய்யும் மாநிலங்களின் பட்டியலில் 17 ஆவது இடத்தில் இருந்த நாம் கடந்த 10 மாதங்களில் 7 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளோம். –  தெளிவற்ற தகவல்”

பிப்ரவரி 21,2018 அன்று அரசு அளித்த தகவல்படி, 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் சுலபமாக தொழில் செய்யும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் 14 ஆவது இடத்தில் உள்ளது.

கடந்த 10 மாத காலத்தில் மாநிலத்தில் எந்த கலவரமும் நடைபெறவில்லை. –  ”தெளிவற்ற தகவல்”

பிப்ரவரி 6, 2018 மக்களவையில் அளிக்கப்பட்ட தகவல் படி, 2017 ஆம் ஆண்டில் நாட்டிலேயே அதிகப்படியாக உத்தரப் பிரதேசத்தில் தான் 195 மத கலவரங்கள் நடைபெற்றுள்ளது. இதில் 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 542 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு, நாடு முழுவதிலும் நடந்த கலவர சம்பவங்களில் நான்கில் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் தான் நடந்துள்ளது.

இந்தியா ஸ்பெண்ட் அளித்த தகவல் படி, உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2014 ஆண்டில் 133 மத கலவர சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், 2017 ஆம் ஆண்டில் அது 47% அதிகரித்து 195 ஆக உள்ளது.

நாடு முழுவதும் நடைபெறும் மத கலவரம் குறித்த தகவல்களை உள்துறை அமைச்சகம் சேகரித்து பராமரித்து வருகிறது. கலவரங்கள் அனைத்து இந்திய தண்டனை சட்டப்படி 147 முதல் 151 வரை உள்ள பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்படும். ஆனால் உத்தரப் பிரதேசத்தில் நடந்த கலவரங்கள் எந்த பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சகம் குறிப்பிடவில்லை.

ஜனவரி 26, 2018 காஸ்கஞ்ச் -சில் நடைபெற்ற கலவரத்தில் சந்தன் குப்தா (22) என்பவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

குடியரசு தினத்தன்று அனுமதி பெறாமல் ஊர்வலம் நடத்தியதற்காக, இந்த கலவரத்தில் தொடர்புள்ள 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடந்த ஜனவரி 27, 2018 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

காஸ்கஞ்ச்-சில் நடைபெற்றது இரண்டு குழுவினருக்கு இடையே நடந்த மோதலே தவிர சாதி கலவரம் இல்லை என காவல்துறை இயக்குநர் கூறியதாக பிப்ரவரி 14, 2018 அன்று ஸ்ரோல் இணைய இழதில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

நாங்கள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். கரும்பு விவசாயிகளுக்கு ரூ.25,000 கோடி நிலுவை தொகை வழங்கியுள்ளோம். – ”பாதி உண்மை”

நுகர்வோர் விவகாரங்கள் , உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் ஆகஸ்ட் 11, 2017 மாநிலங்களவையில் அளித்த தகவல் படி, கரும்பு விவசாயிகளுக்கு மொத்தமுள்ள ரூ.25,387 கோடி நிலுவைத் தொகையில் ரூ.23,044 கோடி (91%) வழங்கப்பட்டுள்ளது.

ஜூலை 21,0217 அன்று உள்ள தகவல்படி, ரூ.2,343 கோடி நிலுவையில் உள்ளது.

ஜனவரி 25,2018 தி இந்து நாளிதழ் வெளியிட்ட செய்தியில், கரும்பு அரைவைக்கான காலம் தொடங்கி 3 மாதம் ஆன நிலையில், சர்க்கரை ஆலை முதலாளிகள் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவை தொகை ரூ.2,200 கோடி.

செப்டம்பர் 13, 2017 மிண்ட் இணைய இழத் வெளியிட்ட செய்தியில் உத்தரப் பிரதேச மாநில அரசு முதல் கட்டமாக ரூ. 7,371 கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 86 லட்சம் விவசாயிகளில் 10 லட்சம் விவசாயிகளுக்கு மட்டுமே அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என டைம்ஸ் ஆப் இந்தியா பிப்ரவரி 19, 2018 அன்று செய்தி வெளியிட்டிருந்தது.

உத்தரப் பிரதேச மாநில விவசாயிகள் 18 மணி மின் விநியோகம் பெறுகின்றனர். – ” உண்மை ”

மத்திய மின்சார ஆணையம் அளித்த தகவல்படி, ஜனவரி 2018ல் உத்தரப் பிரதேசத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு சராசரியாக நாள் ஒன்றிற்கு 18.08 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படுகிறது.

மத்திய அரசு அளித்த தகவல் படி, பிப்ரவரி 21,2018 தேதி வரை 1.37 கோடி வீடுகளில் மின் வசதி இல்லை.

மாநிலத்தில் மின்சாரம் ஒரு பெரும் பிரச்சனையாக நிலவி வருகிறது என வாக்காளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கூறியுள்ளனர். மின் வெட்டு குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 38% பேர் தினமும் மின் வெட்டு ஏற்படுகிறது என்றும் , 16% பேர் ஒவ்வொரு வாரமும் மின் வெட்டு ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளதாக இந்தியா ஸ்பெண்ட் பிப்ரவரி 6, 2017 அன்று செய்தி வெளியிட்டிருந்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.