சென்னை,
சென்னையில் மின்வாரிய ஊழியர் உயர்வு தொடர்பான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி உள்ளது.
சென்னையில் இன்று தொமுச சிஐடியு உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 17 தொழிற்சங்களுடன் இன்று ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர்களுக்கு 2.57 % ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. 90 ஆயிரம் ஊழியர்களுக்கு 2017ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.களப்பிரிவில் 2,000 மின்பாதை ஆய்வாளர்கள், 50 சிறப்புநிலை முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.  மின்துறை அமைச்சர் தங்கமணி, மின்கழகத் தலைவர் சாய்குமார் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

Leave A Reply

%d bloggers like this: