பெரு நாட்டில் பேருந்து 200மீ ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 44 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெரு நாட்டில் உள்ள சாலா நகரிலிருந்து, ஆர்கியூபா பகுதிக்கு 60க்கும் மேற்பட்டோரை ஏற்றிக்கொண்டு, ஆக்கோனா நதியை ஒட்டியுள்ள மலைச்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
எதிர்பாராத விதமாக, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மலைச்சாலையை விட்டு விலகி, 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில், தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 44 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் திடீரென கண் அயர்ந்ததே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: