காவிரி நதிநீர் பிரச்சனையை குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று கமலஹாசன் கூறியதற்கு சிபிஐஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிடுகையில்; அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று கமலஹாசன் கூறியிருக்கிறார். இது காவிரிப் பிரச்சனைக்கு பொருந்தாது. கடந்த காலங்களில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் சுமூகத் தீர்வு ஏற்படாத நிலையில்தான் நம்முடைய வற்புறுத்தல்களாலும் போராட்டங்களாலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படியும் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையின் மீது மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தத் தீர்ப்பை மீண்டும் கிடப்பில் போடாமல் உறுதியாக மத்திய அரசும் கர்நாடக அரசும் அமல்படுத்த வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பாகும். இதற்கு தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க முன்வர வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமலாக்க போராட வேண்டிய நேரத்தில், அதற்காக இன்று அனைத்து கட்சி கூட்டம் தமிழக அரசு சார்பில் நடைபெற இருக்கிறபோது நேற்று மதுரையில் பேசிய கமலஹாசன் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வற்புறுத்துவது தமிழக நலனை காவு கொடுப்பதாக அமையும் என்று கருதுகிறேன். என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி இவர் கட்சியில் விவசாய சங்கத்தின் தலைவராக இருக்கும் போது காவேரி நீர் பிரச்சனையை குறித்து பல போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: