புதுதில்லி:
ரோட்டாமேக் பேனா நிறுவன முதலாளியான விக்ரம் கோத்தாரி, நாட்டின் 7 பொதுத்துறை வங்கிகளிடம் ரூ. 2 ஆயிரத்து 919 கோடி அளவிற்கு கடன் வாங்கினார். அந்தக் கடன்கள் இப்போது வட்டியுடன் சேர்த்து ரூ. 3 ஆயிரத்து 695 கோடியாக உயர்ந்து உள்ளது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கடன் தொகையில் ஒரு பைசாவைக் கூட திருப்பிச் செலுத்தவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ., விக்ரம் கோத்தாரியை கைது செய்து உள்ளது.இதனிடையே, நேற்று இரவு விக்ரம் கோத்தாரி மற்றும் அவரது மகன் ராகுல் கோத்தாரியை கான்பூரிலிருந்து தில்லி அழைத்து வந்த சிபிஐ அதிகாரிகள், இன்று தீவிர விசாரணை விசாரணை மேற்கொண்டனர்.

Leave A Reply