நாகப்பட்டினம்:
இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் ஆடைகளைக் களைந்து, தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.இராமேஸ்வரம் பாம்பனைச் சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகில் கோடியக்கரை கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், படகிலிருந்த 3 மீனவர்களின் ஆடைகளைக் களைந்து இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், ஒரு மீனவரின் வாயில் புகையிலையை திணித்ததில் அவர் மயங்கி விழுந்ததாகவும், படகில் இருந்த உணவுப்பொருட்களைக் கூட இலங்கை கடற்படையினர் சூறையாடி எடுத்துச் சென்று விட்டதாகவும் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: