ஹைதராபாத்,
தெலுங்கானாவில் இன்று காலை ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் வானபார்தி மாவட்டத்தில் உள்ள கானிமெட்டா என்ற இடத்தில் இன்று காலை ஐதாராபாத்தில் இருந்து வந்த ஒரு காரும், எதிர்புறம் வந்த இன்னொரு காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும், காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்கான அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.