தூத்துக்குடி:                                                                                                                                                                             தூத்துக்குடியில் நேற்று மாலை மார்க்சிஸ்ட் கட்சியின் செம்படை பேரணியில் புகந்து காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதோடு காயமடைந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். செந்தொண்டர் அணிவகுப்பு பொதுக்கூட்ட திடலை நோக்கி சென்று கொண்டிருந்ததபோது, அண்ணாநகர் அருகே காவல்துறையினர் செந்தொண்டர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தினர்.இதில், காயம் அடைந்த 4பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தாங்கள் காயம் அடைந்ததாக கூறி காவலர்கள் அளித்த புகாரின் பேரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த திருப்பூர் விமல் (25), திண்டுக்கல் விஷ்ணு வரதன் உள்ளிட்ட சிலர் மீது 7 பிரிவுகளின் கீழ் தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: