கேப்டவுன்: 
தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்த பொழுது, தென்ஆப்பிரிக்க அணி வீரர்களை தனது வாழ்த்து மழையில் நனைய வைத்தார்.ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றிய போது தென்ஆப்பிரிக்க அணியை எண்ணெய் ஊற்றமால் பொறித்து எடுத்தார்.இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு சில அறிவுரைகளை கூறி வாழ்த்துக்களை தெரிவித்து புகழ்ந்துள்ளார்.

அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் கூறியதாவது:-
“விராட் கோலியின் ஆட்டம் வியக்கும் வகையில் இருக்கிறது.அவரது உணர்ச்சி வசம்தான் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்துவதாக நினைக்கிறேன்.ஆனால் கோலி தனது உணர்ச்சிவசத்தை கட்டுபடுத்தி கொள்ள வேண்டும். அவர் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்.வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற மனநிலையை அணிக்கு ஏற்படுத்தி வழி நடத்தி செல்கிறார். நீண்ட நாட்கள் இந்தியா முதலிடத்தில் இருக்கும். கோலி மிகப்பெரிய சாதனைகள் புரிவார் “என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.