சென்னை,

வரும் மார்ச் மாதம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினர் பங்கேற்கும் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் மார்ச் மாதம் 5 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினர் பங்கேற்கும் மாநாடு நடைபெற உள்ளது.  தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில்  மாநாடு நடைபெற உள்ளது. இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , மார்ச் 5 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினருக்கான ஒருங்கிணைந்த மாநாடு நடைபெறும். மார்ச் 6 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறும். மார்ச் 7 ஆம் தேதி காவல்துறையினர் பங்கேற்கும் மாநாடு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: