புதுச்சேரி, பிப்.20-
வரி உயர்வை எதிர்த்து வியாபாரிகள் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுவை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்தது. தொழில் வரி, வணிக வளாக வரி, வணிக உரிமை கட்டணம் ஆகியவற்றை புதுவை அரசு உயர்த்தி உள்ளது. அதோடு குடிநீர், மின்சாரம், சொத்து ஆகியவற்றுக் கான வரியும் உயர்த்தப்பட் டுள்ளது. இது மட்டுமல்லாமல் புதிதாக குப்பை அள்ளுவதற்கு நகராட்சிகள் சார்பில் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. வரி உயர்வு மற்றும் புதிய வரி விதி ப்புக்கு புதுவையில் உள்ள அரசியல் கட்சிகள், சமூக நல இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் வணிகர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

வரி உயர்வை கைவிடக்கோரி புதுவை வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் பிப்.20 செவ்வாயன்று 24 மணி நேரம் கடை அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதன்படி காலை 6 மணி முதல் கடை அடைப்பு போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தினால் புதுவையின் பிரதான சாலைகளான நேரு வீதி, காமராஜர் சாலை, காந்தி வீதி, அண்ணா சாலை, மறைமலை அடிகள் சாலை, புஸ்சி வீதி, கடலூர் சாலை, 100 அடி ரோடு, மிஷன் வீதிஉள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.இதே போல் பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், நெல்லித் தோப்பு, முத்தியால் பேட்டை, முதலியார்பேட்டை மார்க்கெட் கடைகளும் அடைக்கப்பட்டன. அதேபோல், பிரதான சாலைகளில் இயங்கும் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடிக் கிடந்தன.

மீனவர்கள் ஆதரவு:
வரி உயர்வுக்கு எதிரான வணிகர்களின் கடையடைப்பு போராட்டத்திற்கு காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 11 கிராம மீனவர்களும் ஆதரவு தெரிவித்து மீன்பிடிக்கச் கடலுக்கு செல்லவில்லை. திரைப்பட உரிமையாளர்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. கடை அடைப்பு போராட்டத்தால் புதுவை சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிக குறைவாக இருந்தது. இதனால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. நகர் மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள சிறிய டீக்கடை, பெட்டிக் கடைகள் மற்றும் சிறிய மளிகைகடைகள் கூட மூடிக்கிடந்ததால் புதுவை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதேபோல் புதுவை மாநிலம் காரைக்கால் பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டன.

சிபிஎம்:
இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் ஜனநாயக அமைப்புகளும் ஆதரவு தெரி வித்தன. கடையடைப்பு போராட்டத்தில் புதுச்சே ரியில் 90 சதவீதத்திற்கு மேலான கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு விடுதிகள் என எதுவும் திறக்கப்படவில்லை. இதில் திரையரங்கு உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து காட்சிகளை ரத்து செய்திருந்தனர். அண்ணாசலை, காமராஜ ர்சாலை, நேருவீதி, காந்தி வீதி ஆகிய முக்கிய வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.

ஆட்டோ ஓட்டுநர்கள்
தனியார் பேருந்துகள், டெம்போக்கள், ஆட்டோக்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றாலும், போதிய மக்கள்கூட்டம் இன்றி அங்காங்கே ஆட்டோக்கள், டெம்போக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: