சேலம், பிப்.20-
லஞ்சத்தில் திளைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சேலத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் சட்டப்படியான சலுகைகள், பதவி உயர்வு, ஊர்மாற்றம் பெறுவது மற்றும் விடுப்பு எடுப்பது என எதற்கெடுத்தாலும் உயரதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர். இதற்கு நிர்வாக இயக்குநரும் துணை நிற்பதாக குற்றம்சாட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சம்மேளனம் சார்பில் செவ்வாயன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் லட்சுமணன் தலைமை வகித்தார். இதில் போக்குவரத்து தொழிலாளர்களிடம் இருந்து லஞ்சம் வாங்கும் உயரதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு துணை போகும் நிர்வாக இயக்குநர் மீது சட்டபடி கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் அரசுப் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.