திண்டுக்கல், பிப்.20-
யு.பி.எஸ்.சி. தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி, தமிழகத்தில் முதலிடம் பிடித்தார்.
சமீபத்தில் யு.பி.எஸ்.சி தேர்வு நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஐ.எப்.எஸ். பிரிவில் திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த வட்டமலைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கனகராஜ் – ராதாமணி ஆகியோரது மகள் கார்த்திகாயினி, தமிழகத்தில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்தார். நாடு முழுவதும் 110 பேர் தேர்வு எழுதினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் முதலிடம் பிடித்து சாதித்த மாணவி கார்த்திகாயினி கூறுகையில், எனது குடும்பம் விவசாய குடும்பமாகும். யு.பி.எஸ்.சி. தேர்வில் முதல் முறை எழுதும் போது, முதன்மை தேர்வில் தோல்வி அடைந்தேன். தொடர்ந்து விடா முயற்சியுடன் 2 ஆம் முறை தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளேன். கடின உழைப்பு இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்று கார்த்திகாயினி கூறினார். (நநி)

Leave a Reply

You must be logged in to post a comment.