இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 22வது தமிழ்நாடு மாநில மாநாடு 2018 பிப்ரவரி 17-20 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெற்றது. நிறைவு நாளான இன்று நடைபெற்ற இம்மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்டு 650 பேர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். மாநாட்டின் நிறைவு நாளான இன்று 80 பேர் கொண்ட மாநிலக்குழுவிற்கு 79 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒரு இடத்திற்கு பின்னர் தேர்வு செய்வது என மாநாடு முடிவு செய்துள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளராக தோழர் கே. பாலகிருஷ்ணன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். 15 பேர் கொண்ட செயற்குழுவும், 2018 ஏப்ரல் 18-22 ல் ஹைதராபாத்தில் நடைபெறும் 22வது அகில இந்திய மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து 50 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 5 பேர் கொண்ட மாநில கட்டுப்பாட்டுக்குழுவிற்கு தோழர். எஸ். பாலசுப்பிரமணியன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் 22வது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

தோழர். கே. பாலகிருஷ்ணன் பற்றிய விபரம்

தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 1970ம் ஆண்டில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்கள் உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னணியில் நின்றவர். 1972ம் ஆண்டில் மாணவர் உரிமைக்கான போராட்டத்தில் பல்கலை நிர்வாகத்தின் தூண்டுதலோடு கடுமையான தாக்குதலுக்கு ஆளானார். இதனால் பல்கலைக்கழகம் இவரை நீக்கியது. 1973ம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தின் முதல் மாநில மாநாட்டில் மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு திறம்பட செயலாற்றியவர்.
1975ம் ஆண்டு அவசர நிலை காலத்தின் போது தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு கட்சி பணிகளை நிறைவேற்றினார். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில / மாவட்ட பொறுப்புகளிலிருந்து பணியாற்றியதை தொடர்ந்து 1989ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தின் கட்சியின் மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 1982ம் ஆண்டு முதல் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக செயல்பட்ட தோழர் கே. பாலகிருஷ்ணன் 1998ம் ஆண்டு மாநில செயற்குழு உறுப்பினராகவும், 2012ம் ஆண்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினராக 2011ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு தொகுதியிலும், சட்டப்பேரவையிலும் சிறப்பாக பணியாற்றியவர். சட்டப்பேரவையில் கட்சியின் கொறடாகவும் செயல்பட்டார்.
கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்திலும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்திலும், பெண்ணுரிமைக்கான போராட்டத்திலும் பங்கேற்று பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். சிதம்பரம் பத்மினி காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட போது பாதிக்கப்பட்ட பத்மினிக்கு நீதி கேட்டு போராடியவர். நீதிமன்றத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தவர். இதுபோல் மாநில பொறுப்புகளில் இருந்த போது கட்சியின் போராட்டங்களிலும், விவசாயிகள் மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்திலும் முன்னின்ற சிறந்த போராளி தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள்.
தோழர் கே. பாலகிருஷ்ணன் காதல் திருமணம் செய்து கொண்டவர். அவரது மனைவி தோழர் பா. ஜான்சிராணி கம்யூனிஸ்ட் இயக்கத்தின் குடும்பத்தைச் சார்ந்தவர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
* * *
புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநிலக்குழு மாநில செயற்குழு உறுப்பினர்கள்

1. கே. பாலகிருஷ்ணன் (செயலாளர்)
2. டி.கே. ரங்கராஜன்
3. ஜி. ராமகிருஷ்ணன்
4. உ. வாசுகி
5. அ. சவுந்தரராசன்
6. பி. சம்பத்
7. கே. தங்கவேல்
8. ப. செல்வசிங்
9. எம்.என்.எஸ். வெங்கட்ராமன்
10. எஸ். நூர்முகமது
11. ஏ. லாசர்
12. பி. சண்முகம்
13. என். குணசேகரன்
14. கே. கனகராஜ்
15. மதுக்கூர் ராமலிங்கம்

புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள்

1. டி.கே. ரங்கராஜன்
2. ஜி. ராமகிருஷ்ணன்
3. உ. வாசுகி
4. அ. சவுந்தரராசன்
5. பி. சம்பத்
6. கே. பாலகிருஷ்ணன்
7. கே. தங்கவேல்
8. ப. செல்வசிங்
9. எம்.என்.எஸ். வெங்கட்ராமன்
10. எஸ். நூர்முகமது
11. ஏ. லாசர்
12. பி. சண்முகம்
13. என். குணசேகரன்
14. கே. கனகராஜ்
15. மதுக்கூர் ராமலிங்கம்
16. எஸ். ஸ்ரீதர்
17. பி. சுந்தரராஜன்
18. கே. பாலபாரதி
19. ஆர். மல்லிகா
20. ஜி. உதயகுமார்
21. ஜி. ஆனந்தன்
22. பி. ஜான்சிராணி
23. என். அமிர்தம்
24. ஐ. ஆறுமுகநயினார்
25. கே. காமராஜ்
26. டி. ரவீந்திரன்
27. வி. மாரிமுத்து
28. ஆர். கருமலையான்
29. டி. ஆறுமுகம்
30. க. பீம்ராவ்
31. மாலதி சிட்டிபாபு
32. பி. சுகந்தி
33. எம். சின்னதுரை
34. என். பாண்டி
35. எஸ். கண்ணன்
36. ஐ.வி. நாகராஜன்
37. வி.பெருமாள்
38. கே.ஜி. பாஸ்கரன்
39. ஏ. பாக்கியம்
40. ஜி. நீலமேகம்
41. டி. வெங்கடேசன்
42. சி. ராமகிருஷ்ணன்
43. டி. ஏழுமலை
44. ஜி. சுகுமாறன்
45. கே. சாமுவேல்ராஜ்
46. ஆர். லீமாறோஸ்
47. எஸ்.கே.பொன்னுத்தாய்
48. ஆர். பத்ரி
49. ஆர். வேல்முருகன்
50. சி. கல்யாணசுந்தரம்
51. கே. நாகராஜன்
52. கே. சுவாமிநாதன்
53. வி. ராமமூர்த்தி
54. எல். சுந்தர்ராஜன்
55. கே.எஸ். அர்ச்சுணன்
56. கே. அர்ச்சுணன்
57. எஸ். வாலண்டினா
58. சு. வெங்கடேசன்
59. எஸ். முத்துக்கண்ணன்
60. வி. குமார்
61. வெ. ராஜசேகரன்
62. ஆர். விஜயராஜன்
63. இ. சங்கர்
64. ஜி. சுந்தரமூர்த்தி
65. ஆர். செல்லசுவாமி
66. எம். ஜெயசீலன்
67. ஆர். சச்சிதானந்தம்
68. நாகை மாலி
69. ஏ. குமார்
70. எம். சிவக்குமார்
71. பி. ராமமூர்த்தி
72. என். சுப்பிரமணியன்
73. சி. பத்மநாபன்
74. கே. ஆறுமுக நயினார்
75. எஸ்.பி. ராஜேந்திரன்
76. எம். கண்ணன்
77. கோ. மாதவன்
78. வி. பிரமிளா
79. எம். மகாலெட்சுமி

சிறப்பு அழைப்பாளர்கள்
1. என். சங்கரய்யா
2. கே. வரதராசன்
3. எஸ்.ஏ. பெருமாள்
4. என். சீனிவாசன்
5. ஏ.வி. முருகையன்
6. மூசா
7. வெங்கடேஷ் ஆத்ரேயா
8. ஆர். மனோகரன்

அழைப்பாளர்கள்
1. எஸ். திருநாவுக்கரசு
2. பி. டில்லிபாபு
3. எஸ். பாலா
4. வீ. மாரியப்பன்
5. எஸ். நம்புராஜன்
6. தீபா
7. ஏ. ராதிகா
8. வீ. அமிர்தலிங்கம்

Leave A Reply

%d bloggers like this: