இராமநாதபுரம்:
இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட, தமிழக மீனவர்கள் 109 பேர், நடுக்கடலில் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்.இராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 109 பேர், கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வதாக அறிவித்த இலங்கை அரசு, பருத்தித்துறை மற்றும் ஊர்க்காவல்துறை நீதிமன்றங்களுக்கு பரிந்துரைக் கடிதம் வழங்கியது. அதனை ஏற்று, தமிழக மீனவர்களை இலங்கை நீதிமன்றங்கள் விடுதலை செய்தன.

அதைத்தொடர்ந்து, விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 109 பேரும் சர்வதேச கடல் எல்லையில், இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதேபோன்று இந்திய கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு தமிழக சிறையில் இருந்த இலங்கை மீனவர்கள் 6 பேரும் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: