கோவை, பிப். 20-
பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசியர் பணியிட நியமனத்திற்கு லஞ்சம் பெற்றதாக கைது செய்யபட்ட முன்னாள் துணைவேந்தர் கணபதி ஜாமீன்கோரி மீண்டும் மனுதாக்கல் செய்துள்ளர்.

பேராசியர் பணியிட நியமனத்திற்கு லஞ்சம் பெற்றதாக கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கணபதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர் தர்மராஜ் ஆகியோரை கடந்த பிப்.3ம் தேதி கோவை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர். பின்பு இருவரையும் கோவை லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து உடனடியாக இருவரும் ஜாமீன்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி ஜான்மினோ தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து துணைவேந்தர் கணபதியை, காவல் துறையினர் 5 நாட்கள் தங்களது காவலில் எடுத்து விசாரித்தனர். பின்பு மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் துணைவேந்தர் கணபதி மீண்டும் ஜாமீன் வழங்கக்கோரி கோவை விஜிலென்ஸ் நீதிமன்றத்தில் செவ்வாயன்று மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜான்மினோ, மனு மீதான விசாரணையை பிப். 22 தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave A Reply

%d bloggers like this: