சேலம்,பிப்.20-
சேலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

சேலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டுனர்களுக்கும், தனியார் ஓட்டுனர்களுக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் இலவச மருத்துவ முகாம் செவ்வாயன்று சேலம் நேரு கலையரங்கத்தில் நடைபெற்றது. இம்முகாமை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தொடங்கி வைத்தார். இதில் வாகன ஓட்டுநர்கள் பாதுகாப்பான வேகத்தில் செல்லுதல், சாலை சந்திப்பில் வேகத்தை குறைத்தல், முன் செல்லும் வாகனத்தில் இருந்து இடைவெளி விட்டு செல்லுதல், சிக்னல் பெற்ற பிறகு முந்துதல், மருத்துவமனை, சிக்னல் விளக்குகளை மதித்து வானத்தை இயக்குதல் போன்ற போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து சேலம் குறிஞ்சி மருத்துவமனை சார்பில் வாகன ஓட்டுநர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் ஜெயராமன், ஒட்டுனர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், இந்நிகழ்ச்சியில் காவல்துறை உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தாமோதரன், வெங்கடேசன், கல்வி நிறுவன வாகன ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: