சேலம், பிப்.20-
அறிவியல் தினத்தை கொண்டாடும் வகையிலும், ஆசிய புத்தகத்தில் இடம்பெறும் வகையிலும்சேலத்தில் கல்லூரி மாணவிகள் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பு இணைந்து தேசிய அறிவியல் தினத்தை வரவேற்கும் வகையில் ராக்கெட் வடிவில் 6 ஆயிரத்தை 500 மாணவிகளை அமரவைக்கும் நிகழ்ச்சி செவ்வாயன்று சேலம் கைலாஷ் மானோசரோவர் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. ஆசிய புத்தகத்தில் இடம்பெற மாணவிகள் இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். முன்னதாக, இந்த நிகழ்ச்சி பள்ளியின் தலைவர் கைலாசம் தலைமையில் நடைபெற்றது. இதனை சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர் துவக்கி வைத்தார். இதில் ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் நிர்வாக அதிகாரி ஸ்ரீமதி கேசன், கல்லூரி தாளாளர் செந்தில்குமார், செயல் தலைவர் இராஜவிநாயகம் கல்லூரி முதல்வர் சொ.ஜெயந்தி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.