சென்னை,

சென்னை மடிப்பாக்கம் அருகே தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் பெண் ஊழியர் மீது ஆசிட் ஊற்றி தீ வைத்த பரிசோதனை நிலைய உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மடிப்பாக்கம் அருகே வாணுவம்பேட்டையில் உள்ள தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தின் உரிமையாளர் ராஜா, அங்கு பணியாற்றி வந்த பெண் ஊழியருக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததுடன் அவர் மீது ஆசிட் ஊற்றி தீ வைத்தார். இதில் படுகாயமடைந்த பெண் ஊழியர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து உரிமையாளர் ராஜாவை கைது செய்துள்ள காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: