திருவனந்தபுரம், பிப்.19-
கேரள அரசின் கீழ் மாநிலத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் இணைத்து கேரள கூட்டுறவு வங்கி அமைத்திட இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் அனுமதி அளித்திடும் என்று தெரிகிறது. நபார்டு வங்கி இதற்குத் தேவையான அறிக்கையை ஆக்கபூர்வமானமுறையில் இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்பியிருப்பதாகத் தெரிகிறது.அந்த அறிக்கை பரிசீலனையில் இருப்பதாகவும் அநேகமாக இந்த மாத முடிவிற்குள் அதன்மீது வங்கி திறப்பதற்கான
ஏற்பளிப்பு கிடைத்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
நபார்டு வங்கி அளித்திருக்கும் பரிந்துரையின் மிகப் பிரதான அம்சம் மாநிலத்தில் இயங்கும் 14 மாவட்டக் கூட்டுறவு வங்கிகளையும் கேரள மாநில கூட்டுறவு வங்கியுடன் இணைப்பதற்கான ஒன்றாகும். இதேபோன்று ஜார்கண்ட் மாநிலக் கூட்டுறவு வங்கியிலிருந்து வந்திருந்த வேண்டுகோளை இந்திய ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டு அம்மாநிலத்திலிருந்த ஏழு மாவட்டக் கூட்டுறவு வங்கிகளையும் ஜார்கண்ட் மாநில கூட்டுறவு வங்கியுடன் இணைத்து ஏற்கனவே ஏற்பளிப்பு வழங்கியிருக்கிறது.
கேரளாவில் சுமார் 3,825 கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு அவை அனைத்தும் ஓர் இரண்டு அடுக்கு முறையில் செயல்படும். மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டக் கூட்டுறவு வங்கிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களும் புதிதாக அமைந்திடவுள்ள மாநில வங்கிக்கு மாற்றப்படும்.
(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.