காஞ்சிபுரம்,

ஸ்ரீபெரம்பத்தூர் அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரம்பத்தூர் அருகே போந்தூரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியதில் தொழிலாளர்கள் முருகேசன் , அஜித் மற்றும் உணவக ஊழியர் ரவி ஆகியோர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரி சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்று நடந்த இந்த வழக்கு மீதான விசாரணையில் , உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று  உணவு விடுதி உரிமையாளருக்கு   உத்தரவிட்டது.

Leave A Reply

%d bloggers like this: