பெங்களூரு,

பெங்களூரில் உணவு விடுதியில் ஒருவரை கொடூரமாக தாக்கிய எம்எல்ஏ மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் இன்று காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ஹரிஸ் என்பவரின் மகன் முகமது நலபாட். இவர் சனிக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் பெங்களூருவில் உள்ள உணவு விடுதி ஒன்றுக்கு சென்றிருந்தார். அப்போது அவர் அருகே அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்த வித்வாத் என்பவரை இருக்கையில் சரியாக அமருமாறு கூறியுள்ளனர். ஆனால், வித்வாத் தனது காலில் காயம் உள்ளதால், அவ்வாறு அமர முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில், வித்வாத்தை முகமதுவும் அவரது நண்பர்களும் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த வித்வாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த முகமது மற்றும் அவரது நண்பர்களும் வித்வாத் மற்றும் அவரது சகோதரருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முகமது உள்ளிட்ட 10 பேர் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்திய முகமது நலபாட் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். மேலும் முகமது காங்கிரசிலிருந்து 6 வருடம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் முகமது இன்று காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

Leave A Reply

%d bloggers like this: