சேலம்:
சேலம் மாநகரத்தில்  ரவுடியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய காவல் ஆய்வாளரின் செயலால் சேலத்தில் பரபரபாக பேசப்பட்டு வருகிறது.சேலம் மாநகரம் கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கருணாகரன். இவர் சட்ட விரோதமாக பல கிரிமினல் நபர்களிடம் பழகி வந்துள்ளார். இதன் வெளிப்பாடாக கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த ரவுடி சுசீந்தரன் பிறந்த நாளை கேக் வெட்டி அவனுக்கு ஊட்டி விட்டுள்ளார். இதனை ஒருவர் படம் பிடித்து மேல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.
ரவுடி சுசீந்தரன் மாநகரத்தில் பல்வேறு கொலை, கொள்ளை குற்றங்களில் ஈடுபட்டுள்ளவன். இவனின் பிறந்த நாளில் காவல் ஆய்வாளரே கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருப்பது. சேலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதையடுத்து இத் தவறை செய்த காவல் ஆய்வாளர் கருணாகரனை ஆயுதப்படைக்கு மாற்றி காவல்துறை உயர் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.