தூத்துக்குடியில் நடைபெற்று வரும் சிபிஎம் மாநில மாநாட்டு அரங்கில் ராமச்சந்திர வைத்திய நாத் எழுதிய பூர்ணாஹுதி என்ற நூலை மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் வெளியிட, இரா.தெ.முத்து பெற்றுக் கொண்டார். ‘ இன்றைய இந்தியா“ என்ற நூலை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் வெளியிட மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் பெற்றுக் கொண்டார். “ இடது நிகழ்ச்சி நிரல் “ என்ற நூலை மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வெளியிட நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் பெற்றுக் கொண்டார். ‘‘ காம்ரேட் அம்மா’’ என்ற நூலை மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி வெளியிட மாநிலக்குழு உறுப்பினர் ச.தமிழ்ச்செல்வன் பெற்றுக் கொண்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.