தூத்துக்குடி, பிப்.18-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரதி புத்தகாலயத்தின் விற்பனை நிலையத்தில் மலிவு விலையில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ரோசா லக்சம்பர்க்: வரலாறும் கட்டுரைகளும், தேசியம் மற்றும் காலனியப் பிரச்சனைகள், லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள், பஷீர் – தனி வழியிலோர் ஞானி, என்.சங்கரய்யா வாழ்க்கையும் இயக்கமும், களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்கள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட புத்தகங்களுக்கு 50 சதவீதம் கழிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் வெளியிடப்பட்ட இன்றைய இந்தியா, இடது நிகழ்ச்சிநிரல், காம்ரேட் அம்மா –என மொத்தம் ரூ.240 விலையுள்ள 3 புத்தகங்களும் ரூ.160க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொது உடைமை என்றால் என்ன?, புரட்சிப் பெருநதி, கல்வியும் சுகாதாரமும் ஆகிய ரூ.490 விலையுள்ள 3 புத்தகங்கள் ரூ.260க்கும், பூர்ணாஹுதி சிறுகதைத் தொகுப்புக்கு 25 சதவீதம் கழிவும் வழங்கப்படுவதாக பாரதி புத்தகாலய மேலாளர் நாகராஜன் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.