திபெத்தில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திபெத் தலைநகர் லாசாவில் ஜோகாங் என்ற பழமையான புத்த மத கோவில் உள்ளது. 1,300 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த கோவில் கடந்த 2000ம் வருடத்தில் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தலம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவிலில் நேற்று இரவு திடீரென பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது.  இதனால் ஏற்பட்ட புகை மண்டலம் அப்பகுதியை மறைத்ததுடன் தீ  கொழுந்து விட்டு எரிந்தது.  இதனை தொடர்ந்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  இந்த கோவிலில் புத்தரின் 12 வயது உருவ சிலை உள்பட பல்வேறு கலாசார பொக்கிஷங்கள் பல உள்ளன.  உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.  தீயினால் கோவிலுக்கு ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.  விபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: