கோவை, பிப். 18-
கோவை ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் ஞாயிறன்று ஆய்வு மேற்கொண்டார்.

தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மிஸ்ரா ஞாயிறன்று கோவை ரயில் நிலையத்தில் உள்ள மல்டிலெவல் டூவிலர் பார்க்கிங் அமைய உள்ள இடத்தை ஆய்வு
செய்து, பணிகளை விரைவில் துவக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து, பார்சல் ஆபிஸ், லிப்ட் அமைக்கும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டார். எஸ்கிலேட்டர் செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், ரயில் நிலையத்தின் முகப்பில் அமைக்கப்பட்டு வரும் நிழற்குடை அமைக்கும் பணிகளையும், ரயில் நிலையத்திற்கு காரில் வருபவர்களுக்கு தனி வழி அமைக்கும் பணி, பிளாட்பார்ம் 1 ஏ-யின் காம்பவுண்ட் சுவரில் பெயிண்ட் அடித்து அழகுப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதேபோல், கோவை ரயில் நிலையத்தில் நடக்கும் பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, சேலம் ரயில்வே கோட்ட பொதுமேலாளர் ஹரிசங்கர் வர்மா, கோவை ரயில் நிலைய இயக்குநர் சதிஷ் சரவணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.