டெஹ்ரான்,
ஈரானிலிருந்து 66 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து யாசுஜ் நகரம் நோக்கி சென்ற பயணிகள் விமானம் மலைப்பகுதியில் கீழேவிழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானத்தில் 60 பயணிகள் 6 ஊழியர்கள் உட்பட மொத்தம் 66 பேர் பயணித்தனர். நடுவானில் சென்று கொண்டிருந்த போது மாயமான விமானம் கீழே விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளான தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.