மோடி இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அங்கு, அவரது ஆதரவாளர்கள், “ மோடி, மோடி“ என்று சப்தம் போட்டு அழைத்தார்கள். ஆனால், இப்போது அப்பபடி அழைக்கவில்லை. ஏனென்றால், முதலில் சொல்லப்படும் மோடி, பிரதமர் மோடி என்றும், இரண்டாவதாக சொல்லப்படும் மோடி, 11 ஆயிரம் கோடி மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடி என்றும் மக்கள் புரிந்து கொள்வார்கள் என்பதால் தான், இப்போது அழைப்பதில்லை.தனக்கு சிபிஐ விசாரணை வரும் என்று தெரிந்தே நீரவ் மோடி குடும்பத்தினர் மற்றும் மோசடியில் பங்குபெற்ற அவரது உறவினர்களுடன் வெளி நாட்டிற்கு தப்பியோடினார். சுவிட்சார்லந்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் சந்திப்பில் நீரவ் மோடியும் பங்கேற்றார். அந்த சந்திப்பில் பங்கேற்ற பிரதமருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

நானும் ஊழல் செய்ய மாட்டேன். மற்றவர்களையும் ஊழல் செய்ய விடமாட்டேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்ட மோடியின் ஆட்சி தற்போது அம்பலப்பட்டு நிற்கிறது.

Leave A Reply

%d bloggers like this: