சென்னை:
பிரபல நடிகர்களுக்கு ‘எல்லாம்’ தெரியும் என்று மக்கள் நினைக்க வேண்டாம் என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.சென்னையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் மாநாடு நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசியிருப்பதாவது:
கடவுள் பெயரால் ஏற்றத்தாழ்வு கூடாது என்பதுதான் பெரியாரின் பிரச்சாரமாக இருந்தது. தந்தை பெரியாரின் கருத்தை அப்படியே ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. பிடிக்கவில்லை என்றால் பெரியார் கருத்தையே கூட ஏற்க வேண்டாம். அதேபோல பிரபல நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என மக்கள் நம்பக்கூடாது. அப்படி நம்பினால் அது தவறு. நான் ஒருவேளை அரசியலில் பங்கேற்று தோற்றால் அது பெரிய தோல்வி அல்ல. அதேநேரம் வெற்றி பெற்று விட்டால், மக்களின் நிலைமை என்ன என்பதுதான் முக்கியமானது. அதை மக்கள் யோசிக்க வேண்டும்”இவ்வாறு சத்யராஜ் பேசியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.