பெய்ஜிங்,

சீனாவில் கழிவுகள் பதப்படுத்தும் மையத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர்.

சீனாவின் தெற்கே குவாங்டங் மாகாணத்தில் குயிங்யுவான் நகரில் கழிவுகள் பதப்படுத்தும் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  இதில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும்  உயிருடன் மீட்கப்பட்ட ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள காவலர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.