தூத்துக்குடி;
இடதுசாரி ஒற்றுமையை பலப்படுத்தி ஜனநாயக, மதச் சார்பற்ற சக்திகளுக்கு நம்பிக்கை ஊட்டுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில்
இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் சூளுரைத்தனர்.
இரா.முத்தரசன்
தூத்துக்குடியில் துவங்கியுள்ள சிபிஎம் மாநில மாநாட்டை வாழ்த்தி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசியதாவது:                           இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில மாநாடு வரும் மார்ச்
28-31 வரை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற உள்ளது. அம்மாநாட்டில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில
செயலாளர் வழங்க வேண்டும் என அன்புடன் அழைக்கிறோம்.இந்தியாவில் வகுப்புவாத சக்திகள் நாளுக்கு நாள் தங்களை பலப்படுத்தி வருகிறது. தங்களுக்கு கிடைத்த ஆட்சி அதிகாரத்தைப் பயன் படுத்தி பல்வேறு தளங்களில் ஊடுருவி நான்கு வர்ணக் கொள்கைகளை
அமுல்படுத்திட பெரு முயற்சி மேற்கொண்டு வருகிறது. மோடி தலைமையிலான ஆட்சி, அரசியலமைப்பு சட்டததை தகர்த்து எதேச்சதிகார திசை வழியில் செயல்பட்டு
வருகிறது. மேலும், சுதந்திரப் போராட்டத்தால் உருவான மதச்சார்பற்ற கொள்கை கைவிடப்பட்டு,பாசிசத் தன்மையிலான தாக்குதல்கள் ஊக்கப்படுத்தப்படுகின்றன.
பாஜக, தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. அரசின்
படுதோல்வியை மறைத்து மக்களை திசை திருப்பும் வேலையை மேற்கொண்டு வருகிறது. நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாடு குறித்து சிறுதும் கவலை கொள்ளாத மோடி அரசு, வாக்கு வங்கி அரசியலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் மக்களை சாதி, மத ரீதியாக பிளவுபடுத்தி வருவது பேரபாயமாகும்.மத்திய அரசால், மாநில உரிமைகள், மாநில நலன்கள் பறிக்கப் படுகின்றன. கல்வி உரிமைகள் பறிக்கப்பட்டு பெரும் பகுதி மக்களை ஒதுக்கி வைக்கும் போக்கு தீவிரமாகிறது. சமூக வாழ்வை மீண்டும் மனுதர்ம ஆட்சி முறைக்கு கொண்டு செல்ல முயல்கிறது. பிற மொழி பேசும் மக்கள் மீது இந்தி மொழியை வலுக்கட்டாயமாக திணிக்கும் விபரீத முயற்சியை செய்கிறது.
சிறுபான்மை மக்கள், தலித் மக்கள் பாதுகாப்பற்ற அச்ச உணர்வோடு வாழ வேண்டிய நிலை
உருவாகியள்ளது. தொழிலாளர் கள், விவசாயிகள் போராடிப் பெற்ற உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என
அனைத்து பகுதி மக்களின் நலன்களை புறக்கணித்து பன் னாட்டு, பெரு முதலாளிகள்-கார்ப
ரேட் நிறுவனங்களின் நலன்களுக் காகவே உள்ளது.ஏழை, எளிய மக்கள் பெற்று வந்த
மானிய உதவிகள் வெட்டிச் சுருக்கப்பட்டது. விவசாயிகள் தற்கொலைச் சாவுகள் தொடர்கின்றன. புலம் பெயரும் தொழிலாளர் பிரச்சனை தேசிய பிரச்சனையாக வளர்ந்துள்ளது.
மாற்றுக் கருத்துடையோர் குரூரமாக கொல்லப்படுகின்றனர். ஆனால், குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை. நாடாளுமன்ற நெறிமுறைகள் யாவும் மீறப்படுகின்றன.
தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான அரசு, மத்திய அரசிடம் பணிந்து தங்களின் பதவிகளையும், தவறான முறையில் சேர்த்த சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ளவும், மேலும் சொத்துக் களை சேர்க்கவும் கவனம் செலுத்தி வருகின்றனர். மாநில உரிமைகளில் அக்கறை செலுத்தவில்லை. காவிரி நதி நீர் உரிமை, நீட் தேர்வு, உதய் மின் திட்டம், ஜி.எஸ்.டி வரி விதிப்பு, இயற்கை பேரிடர் நிவாரண நிதி உதவி, பெடரோல்-டீசல் விலை உயர்வு, சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்ப்பது போன்றவற்றிற்காக போராட
வில்லை. மாறாக, போராடும் மக்கள் மீது அடக்குமுறைகளை ஏவுகிறது.
மக்களிடமும், தனது கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவை இழந்த நிலையில், மத்திய அரசின் தயவில் ஆட்சி நடைபெறுகிறது. மாநில அரசு பலவீனப்பட்ள்ளதால், பாஜக, தமிழ்நாட்டில் பலத்தை பெருக்க முயல்கிறது. பாஜகவினர், வகுப்புவாத, வெறியூட்டும் தரம் தாழ்ந்து பேசி, வன்முறைகளை தூண்டி அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர். இதுபற்றி மாநில அரசு வாய் திறப்பதில்லை.எனவே, மதச்சார்பற்ற சக்திகள்,ஜனநாயக சக்திகள், சமூக நீதி
யில் அக்கறை உள்ளோர் அனைவரும் ஒன்று சேர்ந்து பரந்து பட்ட மேடையில், பாசிசத் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும். கம்யூனிஸ்ட்டுகள் பரஸ்பரம் ஒன்றுபட்டு செயல்படுவது, ஜனநாயக சக்திகளுக்கும், மதச்சார்பற்றவர் களுக்கும் நம்பிக்கையூட்டும் என உறுதிபடக் கூறுகிறோம். எனவே இடதுசாரி கட்சிகள் ஒன்றுபட்டு போராடவும், இயங்கவும் வேண்டும் என அவர் தெரிவித்தார்.
எஸ்.குமாரசாமி
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( எம்.எல்.) மாநில செயலாளர் எஸ்.குமாரசாமி வாழ்த்துரை வழங்கி பேசியதாவது:                            ஒருமதம், ஒரு கலாச்சாரம் ஒரு மொழி என்று கூறி பன்மைத்து
வத்தை குழிதோண்டி புதைத்துவிட விரும்பும் சங்பரிவார் கூட்டம்,நாட்டின் அனைத்து நாடாளுமன்ற அரசியலமைப்பு சட்ட நிறுவனங்களையும் கைப்பற்றுகிறது. சிதைத்து சீரழிக்கிறது. அதிகாரங்களை ஒன்று குவித்து கட்டங்கடங்காத தனி நபர் எதேச்சதிகாரத்தை நாட்டின் மீது ஏவியுள்ளது. மோடியால் மாற்றம் வரும் என நம்பி மோசம் போனதை புரிந்து கொண்டு, எதிர்ப்புக் குரல்கள், எழுப்புபவர்களை தேசவிரோதிகள் என்கின்றனர்.
அதீத தேசியவாத கூக்குரலிட்டு இஸ்லாமியர்களை பகைவர்களாகவும், இரண்டாம் தர குடிமக்களாகவும் நிறுத்துகிறார்கள்.உச்சநீதிமன்றத்திலிருந்து நீதித்துறை சுதந்திரத்திற்கு, ஜனநாயகத்திற்கு ஆபத்து என்ற அபாய அறிவிப்பு ஒலித்துள்ளது. தமிழ்நாட்டில் மொழி,பண்பாடு, நீர் ஆதாரம், வருவாய்,அதிகாரங்கள் போன்ற உரிமைகள்
மறுக்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் இயற்கை வளம் சூறையாடப்படு
கிறது. மக்கள் கோரிக்கைகள் மீது தமிழ்நாட்டு நலன்கள் அடிப்படை
யில் இடதுசாரி போராட்ட அரசியல் மேடை அமைக்க இது பொருத்தமான நேரம்.
ஏ.ரங்கசாமி
எஸ்.யூ.சி.ஐ ( கம்யூனிஸ்ட்) மாநில செயலாளர் ஏ.ரெங்கசாமி வாழ்த்துரை வழங்கி பேசுகையில்,நமது நாடு, கடுமையான தருணத்தில் இருக்கையில் சிபிஎம் மாநில மாநாடு நடைபெறுகிறது. நாட்டின் மிகப்பெரிய இடதுசாரி கட்சியாக உள்ள இந்திய இடதுசாரி இயக்கத்தின் எதிர்கால பயணப்பாதை சிபிஎம் மாநாட்டின் முடிவு களையும், செயல்பாட்டையுமே பெரிதும் சார்ந்துள்ளது. பழமைவாத மதக்கருத்துக்கள், மூடநம்பிக்கைகள் தூபம் போடப்பட்டு ஊக்கப்படுத்தப்படு
கின்றன. சித்தாந்த கலாச்சாரத் துறைகளில் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. இந்திய மறுமலர்ச்சி உயர்த்திப்பிடித்த மதச்சார்பற்ற ஜனநாயக மதிப்புகள் அனைத்தையும் ஆர்.எஸ்.எஸ் அழித்து வருகிறது. இத்தாக்குதல்களை முறியடிப்பதற்கு சக்தி
வாய்ந்த சித்தாந்த போராட்டம் அவசியமாகும். ஒன்றுபட்ட இடதுசாரி
ஜனநாயக இயக்கம், இத்தருணத்தின் தேவையாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.