திருப்பூர், பிப்.16-
பல்லடத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சந்தமநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் தையல் தொழிலாளி சங்கர். இவரின் மனைவி பாண்டியம்மாள்.இவர்களுக்கு ஹரி என்ற மகனும், தாமரைச்செல்வி என்ற மகளும் உள்ளனர். தாமரைச்செல்வி அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தாமரைச்செல்வி கடந்த 10 நாட்களுக்கு முன்பாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து பல்லடத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்தபோது டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி புதனன்று மாலை சிறுமி உயிரிழந்தார்.

இதுகுறித்து சிறுமி தாமரைசெல்வியின் பெற்றோர்கள் கூறுகையில், கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் செவிலியர்கள் கவனக்குறைவாக செயல்பட்டனர். இவர்கள் முறையான சிகிச்சை அளிக்காத காரணத்தால் தங்களது மகள் உயிரிழந்ததாக புகார் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: